தண்டனையளிப்பதாக சிறுமி மீது ஏறி உட்கார்ந்த 145 கிலோ குண்டு பெண்: நேர்ந்த விபரீதம்
தண்டனையளிப்பதாக ஒன்பது வயது சிறுமி மீது குண்டு பெண் ஏறி உட்கார்ந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு சிறுமி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ப்ளோரிடாவை சேர்ந்தவர் கிரேஸ் ஸ்மித் (69) இவரின் மகள் டெரிக்கா லிண்ட்சே (9)
தாய் ஸ்மித் சொல்வதை கேட்காமலும், ஒழுக்கமாக நடந்து கொள்ளாமலும் டெரிக்கா இருந்ததாக தெரிகிறது.
இதையடுத்து மகளை திருத்த நினைத்த ஸ்மித் தனது உறவுக்கார பெண்ணான வெரோனிகா போசியை (64) தனது வீட்டுக்கு அழைத்து வந்து சிறுமி டெரிக்காவை கண்டிக்க சொல்லியுள்ளார்.145 எடை கொண்ட குண்டு பெண்ணான போசி சிறுமி செய்த தவறுக்கு தண்டனையளிப்பதாக கூறி அவர் மீது ஏறி உட்கார்ந்துள்ளார்.
இதையடுத்து சிறுமி டெரிக்காவுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு பின்னர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் ஸ்மித் மற்றும் போசியை கைது செய்துள்ளனர்.
தண்டனையளிப்பதாக சிறுமி மீது ஏறி உட்கார்ந்த 145 கிலோ குண்டு பெண்: நேர்ந்த விபரீதம்
Reviewed by Author
on
October 20, 2017
Rating:

No comments:
Post a Comment