எல்லை மீறினால் 150 மில்லியன் ரூபா அபராதம்! -
கடல் எல்லையை மீறும் வெளிநாட்டு கடற்தொழிலாளர்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை 150 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல்களை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கை, இந்திய கடற்தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பில் தற்போது புது டெல்லி நகரில் இடம்பெற்றுவரும் கலந்துரையாடலுக்கு அமைய இது தொடர்பான இறுதித்தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை, இந்திய கடற்தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் புதுடெல்லி நகரில் இடம்பெற்றுள்ளது.
அதில் இலங்கை சார்பில் கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர கலந்து கொண்டதுடன், இந்தியா சார்பில் விவசாய அமைச்சர் ஸ்ரீ ராதா மோகன் சிங் கலந்து கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
எல்லை மீறினால் 150 மில்லியன் ரூபா அபராதம்! -
Reviewed by Author
on
October 15, 2017
Rating:

No comments:
Post a Comment