20 பேர் பலி....சோமாலியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில்.
சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஓட்டலை குறிவைத்து இன்று தீவிரவாதிகள் நடத்திய லாரி குண்டு தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.
சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு தீவிரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக உள்ளது.
உள்நாட்டு ராணுவ வீரர்கள் மீது அவ்வப்போது அதிரடியாக தாக்குதல் நடத்திவரும் இந்த தீவிரவாதிகள் மத்திய ஆப்பிரிக்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் பன்னாட்டு அமைதிப் படையினரையும் கொன்று குவிக்கின்றனர். மேலும், வெளிநாட்டினர் வந்து செல்லும் உணவகங்களை குறிவைத்தும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு நகரின் அருகே ஹோடான் மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலை குறிவைத்து இன்று தீவிரவாதிகள் நடத்திய லாரி குண்டு தாக்குதலில் 20-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலின் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
20 பேர் பலி....சோமாலியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில்.
Reviewed by Author
on
October 15, 2017
Rating:

No comments:
Post a Comment