மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை ஆயராக அபிசேகம் செய்யப்பட்ட 25வது ஆண்டு சிறப்பு திருப்பலி....படங்கள்
ஆயர் அவர்களின் பணியானது வார்த்தைகளில் அடங்காது வாழும் நாயகன் மானிடத்தில் மங்கா புகழ் பூத்த உத்தம தலைவன் ஓய்வு பெற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை ஆயராக அபிசேகம் செய்யப்பட்ட நாள் ......20.10.2017
25வது ஆண்டு சிறப்பு திருப்பலி இன்று 20-10-2017 காலை மன்னார் ஆயர் இல்லத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் வண பிதா விக்டர்.சோசை அடிகளாரின் தலமையில் குருக்கள் இனைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இந்த சிறப்பு திருப்பலியில் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கின்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களும், குருக்கள், மற்றும் அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், கத்தோலிக்க ஒன்றியத்தின் பிரதிநிதிகள், மேதகு ஆயர் ஆண்டகை அவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டு ஆயர் அவர்களின் பணி வாழ்விற்காகவும், நற்சுகத்துக்கும் இறைவேண்டுதல் செய்து ஒப்புக்கொடுத்தனர்.
மதத்திற்கு அப்பால் இனம், மதம், மொழி, சாதி சமயம் பாராமல் மக்களுக்காக ஆன்மிக பணியோடு மட்டுமல்லாது அனைத்து மக்களின் உரிமைக்காகவும் தன்னை அர்ப்பணித்து மானிடத்தில் மங்கா ஒளி சுடராக திகழும் ஒய்வு பெற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு யோசேப்பு ஆண்டகை அவர்களை ஆயர், குருக்கள், கன்னியர்கள், அருட்சகோதரர்கள், பொது நிலைத்தலைவர்கள், கத்தோலிக்க ஒன்றியம், கத்தோலிக்க இறைமக்கள் சார்பாக இந்த இனிய நன் நாளிலே வாழ்த்தி வரவேற்று நிற்கின்றோம்.
மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை ஆயராக அபிசேகம் செய்யப்பட்ட 25வது ஆண்டு சிறப்பு திருப்பலி....படங்கள்
Reviewed by Author
on
October 22, 2017
Rating:

No comments:
Post a Comment