எகிப்து டேபிள் டென்னிஸ்: சென்னை வீராங்கனை செலினா செல்வகுமார் 3தங்கம் வென்று சாதனை
எகிப்தில் நடந்த ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னையைச் சேர்ந்த செலினா செல்வகுமார் மூன்று தங்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
எகிப்து ஜூனியர் மற்றும் கேடட் டேபிள் டென்னிஸ் ஓபன் போட்டி ஷார்ம் எல் ஷேக்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த செலினா செல்வகுமார் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
செலினா தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையைச் சேர்ந்தவர். 17 வயதான இவர் ஜூனியர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் மரியம் அல்கோடபியையும், இறுதிச்சுற்றில் மார்வா அல்கோதபியிடம் மோதி வெற்றி பெற்றார். செலினா 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இரட்டையர் பிரிவில் செலினா நைஜீரியாவின் எஸ்தர் ஓரிபாமிசுடன் இணைந்து விளையாடினார். அரையிறுதிச் சுற்றில் செலினா ஜோடி எகிப்தின் சாரா அபூசிட்டா மற்றும் துனிசியாவின் அபிர் காஜ் சாரா ஜோடியுடன் விளையாடி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இறுதி சுற்றில் எகிப்தின் ஃபரிடா பாத்வேய் மற்றும் கிரேக்க நாட்டின் மலாமாடேனியா பாபாடிமிடிரியோ ஜோடியை எதிர் கொண்டனர். செலினா ஜோடி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அணிகள் பிரிவிலும் அவருக்கு தங்கம் கிடைத்தது. இதன் மூலம் செலினா மூன்று தங்க பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
எகிப்து டேபிள் டென்னிஸ்: சென்னை வீராங்கனை செலினா செல்வகுமார் 3தங்கம் வென்று சாதனை
Reviewed by Author
on
October 18, 2017
Rating:

No comments:
Post a Comment