இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக தலைமன்னாருக்கு வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை பிணையில் செல்ல அனுமதி-(Photos)
இந்தியாவில் இருந்து படகு மூலம் தலைமன்னாருக்கு வருகை தந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (6) இரவு கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்லுமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இன்று சனிக்கிழமை(7) மாலை உத்தரவிட்டார்.
வவுனியா – மகாரம்பைக்குளத்தைச் சேர்ந்த துவாறகா என்பவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னார் திருமணமாகி இந்தியாவிற்கு சென்றிருந்தார்.
கடவுச்சீட்டை இந்தியாவில் தொலைத்த காரணத்தினால் விமானம் மூலம் வருகைதர முடியாமல் சட்டவிரோதமாக படகு மூலம் தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் நேற்று வெள்ளிக்கிழமை(7) தலைமன்னாரை வந்தடைந்த நிலையில் அவர்களை கடற்படையினர் கைது செய்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட நிலையில் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில், தலைமன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்ட நிலையில் இவர்களை இன்று சனிக்pழமை மதியம் மன்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்ல அனுமதியளித்ததோடு குறித்த வழக்கு விசாரனைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா – மகாரம்பைக்குளத்தைச் சேர்ந்த துவாறகா என்பவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னார் திருமணமாகி இந்தியாவிற்கு சென்றிருந்தார்.
கடவுச்சீட்டை இந்தியாவில் தொலைத்த காரணத்தினால் விமானம் மூலம் வருகைதர முடியாமல் சட்டவிரோதமாக படகு மூலம் தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் நேற்று வெள்ளிக்கிழமை(7) தலைமன்னாரை வந்தடைந்த நிலையில் அவர்களை கடற்படையினர் கைது செய்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட நிலையில் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில், தலைமன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்ட நிலையில் இவர்களை இன்று சனிக்pழமை மதியம் மன்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்ல அனுமதியளித்ததோடு குறித்த வழக்கு விசாரனைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக தலைமன்னாருக்கு வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை பிணையில் செல்ல அனுமதி-(Photos)
Reviewed by NEWMANNAR
on
October 07, 2017
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 07, 2017
Rating:

No comments:
Post a Comment