மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு தேசிய மட்ட சாதனையாளர் விருது!
“அகில இலங்கை தமிழ்த்தின விருது விழா 2017” நிகழ்வின்போதே வடமாகாணத்தைச் சேர்ந்த 40 பேருக்கு எழுத்து-இசை-நாடகம்-நடனம்-ஊடகம் போன்ற துறைகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு தேசிய மட்ட சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட இவ்விருதுக்கான விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 15-10-2017 திகதி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இந்தத் தேசிய சாதனையாளர் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் - ஊடகத் துறை

“அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் ஊடகத்துறையில் ஆற்றிய மேன்மையான பணிகளையும்ää ஊடகத்துறைக்கு வழங்கிய முதன்மையான பங்களிப்பையும் பாராட்டும் வகையில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது” என விருதுக் கேடயத்தில் ஆங்கிலத்தில் எழுதுப்பட்டுள்ளது.
தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த திரு திருமதி லோரன்ஸ் மேரி கூஞ்ஞ ஆகியோருக்கு 4வது புதல்வாரன இவர் பேசாலையை வதிவிடமாக கொண்ட இவர் 1967 தொடக்கம் 1975 வரை சிறுவனாக இருந்த காலத்தில் யாழ் மறைமாவட்டத்திலிருந்து வெளிவரும் கத்தோலிக்க பத்திரிகையான சத்தியவேத பாதுகாவலனுக்கு ஒரு கத்தோலிக்க செய்தியாளராக செயல்பட்டார்.
இதைத் தொடர்ந்து இவர் சர்வதேச பத்திரிகையாக விளங்கும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் வீரகேசரி, மித்திரன் ஆகிய பத்திரிகைகளுக்கு ஒரு ஊடகவியலாளராக
1976ம் ஆண்டு நியமனம் பெற்றார். அத்துடன் நீண்டகாலமாக இதே நிறுவனத்திலிருந்து வெளிவரும் மெட்ரோ, விடிவெளி, கலைக் கேசரி ஆகிய செய்தி தாள்களுக்கும் தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ என்ற பெயரில் தனது ஆக்கங்களை வெளிப்படுத்தி வருகின்றார்.
அத்துடன் இவர் 2003 தொடக்கம் இன்றுவரை சக்தி எவ்.எம்.நியூஸ் வெஸ்ற் வானொலிக்கு பிராந்திய செய்தியாளராகவும், யாழ் பகுதியிலிருந்து வெளிவரும் காலைக்கதிர் என்ற பத்திரிகைக்கு மன்னார் பிராந்திய செய்தியாளராகவும்
2016 முதல் இன்றுவரை இருந்து வருகின்றார். அத்துடன் இவர் கல்முனையில் கற்ற காலங்களில் மட்டக்களப்பு மறைமாவட்டத்திலிருந்து வெளிவரும் தொண்டன் பத்திரிகைக்கு தனது ஆக்கங்களை வெளிப்படுத்தி வந்தார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை தலைமன்னார் மேற்கு றோ.க.த க.பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் இடைநிலை மற்றும் உயர் கல்வியை கல்முனை பத்திமாக் கல்லூரியிலும் கண்டி பூரணவத்த புனித சூசையப்பர் குருமடத்திலும் இருந்து பயின்றார்.
இவர் சிறுவயது தொடக்கம் பத்திரிகைத் தொழிலில் ஆர்வம் கொண்டு விளங்குவதால் நாட்டில் குறிப்பாக மன்னார்ப் பகுதியில் வன்செயல் தலைதூக்கிய காலங்களில் மன்னார்த் தீவு தமிழ் மக்கள் தங்கள் பாதுகாப்புக்கருதி இருமுறை அயல் நாடான இந்திய தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்து சென்றபோதும் இவர் தலைமன்னார் பியரில் இருந்த முஸ்லீம் மக்களின் தயவில் தங்கியிருந்து தனது பத்திரிகைத் தொழிலை பக்கசார்பின்றி நடுநிலையாக இருந்து இலைமறைக் காயாக இருந்து கொண்டு செயல்பட்டார்.
அக்கால கட்டத்தில் இயக்கங்கள் பாதகாப்புக்கருதி படைகளுக்கு எதிராக எச்சரிக்கை விளம்பரம் ஒட்டுவதும் அனுப்புவதுமாக இருந்தபொழுது செய்தியாளராக இவரை இனங்கண்டுகொண்ட இராணுவத்தினர் 5முறை விசாரனைக்கு என மன்னார் தள்ளாடி முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரனைகள் மேற்கொண்டபின் இவர்மட்டில் பாதுகாப்பு படையினருக்கு இருந்துவந்த சந்தேகம் முடிவுக்கு வந்தது. இவரின் பத்திரிகைத்தொழிலில் உண்மை நடுநிலமை மற்றும் பக்கச்சார்பு அற்ற நிலையில் இருந்து செயல்பட்டதால் அன்றைய மன்னார் மாவட்ட அரச அதிபராக இருந்த கே.கணேஸ், பொலிஸ் அதிகாரியாக இருந்த கே.அரசரட்ணம், மற்றும் வீரகேசரி நிறுவனம் ஆகியோர் இவரின் விடுதலைக்கு காரணகத்தாவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்பொழுது இவர் மன்னார் மாவட்ட ஊடவியலாளர் சங்கத்தின் தலைவராகவும் மன்னார் மாவட்டத்திலுள்ள பல சங்கங்களின் நிர்வாக மற்றும் உறுப்பினராகவும் இருந்து சமூகப் பணியில் ஈடுபட்டு வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
- நாட்டுக்கூத்த நெறியாளர்- செபஸ்தியான் மாசிலாமணி(சிறந்த கலைச்சேவைக்காய்)
நாட்டுக்கூத்த நெறியாளர் அகிலஇலங்கை சமாதானநிதவானுமாகிய கலாபூஷணம் விருது பெற்ற செபஸ்தியான் மாசிலாமணி
எனது சொந்த இடம் முருங்கன் தற்போது ஆவணம் நானாட்டானில் எனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சமூகசேவையில் ஈடுபாட்டுடன் செயலாற்றி வருகின்றேன் 37வருடங்கள் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் விசேடதரத்தில் ஓய்வு பெற்றமை
எனது சொந்த இடம் முருங்கன் தற்போது ஆவணம் நானாட்டானில் எனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சமூகசேவையில் ஈடுபாட்டுடன் செயலாற்றி வருகின்றேன் 37வருடங்கள் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் விசேடதரத்தில் ஓய்வு பெற்றமை
- 28-02-2002ல் இருந்து அகில இலங்கை சமாதானநீதவனாகவும்
- மன்னார் மாவட்ட ஆதாரவைத்தியசாலை அபிவிரத்திக்குழுவின் நிர்வாக உறுப்பினராக உள்ளேன்.
- நானாட்டான் பகுதி நெல்உற்பத்தி சங்கங்களின் சமாசக்கணக்காய்வார்
- நானாட்டான் பங்கு ஆலயமேய்ப்புபணிச்சபையின் பொருளாளராக உள்ளேன்.
- ஆவணம் சிக்கன சேமிப்பு கூட்டுறவுச்சங்க தலைவராகவுள்ளேன்.
- ஆவணம் நெல் உற்பத்தியாளர் குழுத் தலைவராக உள்ளேன்
- ஆவணம் புனித கார்மேல் சேவாசங்கா பொருளாளராகவும் பங்கு ஆலயமேய்ப்புபணிச்சபையின் உபசெயலாளராகவும் உள்ளேன்.
- வஞ்சியன் குளம் கிராமசேவகர் பிரிவு விழிப்புணர்வு குழு உறுப்பினராகவும் நானாட்டான் பங்கு பாடகர் குழு உறுப்பினராகவும் உள்ளேன்.
- நானாட்டான் பங்கு ஆரோக்கிய அன்னை ஆலய சங்கீர்த்தமாக தொடர்ந்து 20வருடங்களுக்கு மேலாக ஆலயப்பணி செய்து வருகின்றமை.
- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மத்தியஸ்தர்குழுவில் அங்கத்தவராகவுள்ளேன்.
- இத்தோடு கோவில்திருவிழாக்கள் பாடல்கள் எழுதுவதும் பாடல்பழக்குவதும் நாட்டுக்கூத்துக்களை நெறியாள்கை செய்வது போன்ற பணிகளுடன் எண்ணற்ற வாழ்த்துப்பாக்கள் கவிபுணைவுகள் இரங்கல்கள் என்று எழுதிக்கொடுத்தும் வருகின்றேன்.
- தங்களின் கலைச்சேவைக்கும் ஆன்மீகச்சேவைக்கும் பாராட்டி வழங்கப்பட்ட பட்டங்களும் விருதுகளும் பற்றி---
- வடக்கு மாகாண தமிழ்இலக்கிய விழாவில்-03-02-2002 நாட்டார்பாடல் கலைஞர் விருதும் பொனனாடைபோர்த்தி கௌரவிப்பு.
- இந்தியா திருச்சியில் வரீமகரஜோதி இசைநாட்டியப்பள்ளியால் வாழ்நாள் சாதனையாளர் விருது-09-10-2008
- இந்தியா திருச்சிராப்பள்ளி இசைச்சங்கம் 19-10-2008 தமிழிசை விழாவில் ஈழத்துநாட்டார்பாடல்களை இசைத்தமைக்காக ஈழத்துப்பாடகர் பாராட்டுச்சான்றிதழ் வழங்கியது.
- இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் 15-02-2009 40வருட கலைச்சேவையைப்பாராட்டி கலாபூஷணம் விருது பெற்றுக்கொண்டேன்.
- கலைவழி இறைப்பணி ஆற்றியமைக்காக இறைக்கலைவேந்தர் விருது மன்னார் மறைமாவட்ட சமூகஅருட்பணி மையத்தினால் வழங்கப்பட்டது.
- வடமாகாண இலக்கியவிழாவில் ஆளுநர் விருது 15-10-2011
- மன்னார் செம்மொழி விழாவில் கொளரவவிருது-25-10-2010
- கௌரவ விருது பொன்னாடையும் -04-09-2012
- மன்னார் இளைஞர் மறைமாவட்ட ஒன்றியம் அரங்கவித்தகர் 22-09-2013
- செபஸ்தியார் 60 யூபிலி விழாவில் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கியமை.
- எனது 08 வயதில் இருந்து இன்றுவரை கலைப்பணியும் சமூகப்பணியும் ஆற்றி வருகின்றேன்.
- இளம் விஞ்ஞானி J.J.சயித்(மாணவப்பராயத்தில் புதியகண்டுபிடிப்பிற்காய் )

மன்.சித்திவிநாயகர் (தேசிய)இந்துக்கல்லூரி உயர்தர மாணவன்
மன்னாரில் இருந்து கடந்த16ம் திகதி தொடக்கம் 22வரை 04-2017 ஜேர்மனியில் நடைபெற்ற இளம் இளம்விஞ்ஞானிகள் பங்குபெறுவதற்கு கல்விஅமைச்சினால் நடாத்தப்பட்ட போட்டியில் சர்வதேசமட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட J.யூட் சயித்த
30 நாடுகள் 252 இளம்விஞ்ஞானிகள் 06பிரிவுகள் அதாவது
- Life Science
- Enviromental Science
- Physics
- Engineering
- Maths
- Chemistry
இப்பிரிவுளில் லைப்சயன்ஸ் பிரிவில் 37 இளம்விஞ்ஞானிகளுடன் சேர்ந்து தனது "கழிவுநீரில் இருந்து மின்சாரம்"புதியகண்டுபிடிப்பினை பற்றிய அறிக்கையினை சமர்ப்பித்தார் அத்தோடு அங்கு நடைபெற்ற உடல் உளத்திற்கான போட்களில் ஒன்றான கார்ப்பந்தயப்போட்டியில் 252 போட்டியாளர்களில் முதல் இடத்தினைப்பெற்று தங்கப்பதக்கம் பெற்றுக்கொண்டார்.
……இலங்கையில் எப்படிபோராடி ஜேர்மன் மகாநாட்டில் கலந்து கொள்ள எனது திறமையை நிரூபித்தேனோ அதுவும் கடைசியாளாக வந்து தெரிவானேன் அதுபோலவே ஜேர்மனி மாநாட்டிலும் எனது லைப்சயன்ஸ்பிரிவில் 37 இளம்விஞ்ஞானிகள் 37வது ஆகவே எனது கழிவுநீரில் இருந்து மின்சாரம் அறிக்கையை சமர்ப்பித்தார்.
……இலங்கையில் எப்படிபோராடி ஜேர்மன் மகாநாட்டில் கலந்து கொள்ள எனது திறமையை நிரூபித்தேனோ அதுவும் கடைசியாளாக வந்து தெரிவானேன் அதுபோலவே ஜேர்மனி மாநாட்டிலும் எனது லைப்சயன்ஸ்பிரிவில் 37 இளம்விஞ்ஞானிகள் 37வது ஆகவே எனது கழிவுநீரில் இருந்து மின்சாரம் அறிக்கையை சமர்ப்பித்தார்.
இன்னும் பல விருதுகள் பெற்றுள்ளதோடு புதியகண்டுபிடிப்புக்களும் வெளிவரவிருக்கின்றது
விருதுபெற்று மன்னாருக்கு பெருமைசேர்த்த நால்வருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி பாராட்டி நிற்கின்றோம்
தொகுப்பு-வை கஜேந்திரன்-
விருதுபெற்று மன்னாருக்கு பெருமைசேர்த்த நால்வருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி பாராட்டி நிற்கின்றோம்
தொகுப்பு-வை கஜேந்திரன்-
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு தேசிய மட்ட சாதனையாளர் விருது!
Reviewed by Author
on
October 17, 2017
Rating:

No comments:
Post a Comment