அவுஸ்.. உயிரிழந்த யாழ். இளைஞனின் பிரேத பரிசோதனையில் புதுத்தகவல்
அவுஸ்திரேலியாவிலிருந்து சடலமாக வந்த யாழ். மீசாலையைச் சேர்ந்த இளைஞனின் மரணம் தொடர்பில் பெற்றோரும் உறவினர்களும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். நேற்று இரவு குறித்த இளைஞனின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், சடலத்தை பெற்றுக்கொள்வதற்கு உறவினர்களும் வருகைத் தந்திருந்தனர். இதன்போது, மகனின் சடலத்தை பெற்றுக்கொள்வதற்கு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அவருடைய தாயும் தந்தையும் கண்ணீருடன் காத்துக்கொண்டு இருந்துள்ளனர். இது தொடர்பாக மரணமடைந்த இளைஞனின் உறவினர்கள் கருத்து தெரிவிக்கையில
மரணமடைந்த ராஜேந்திரன் ராஜிப் 2003ஆம் ஆண்டு மலேசியா சென்றார். பின்னர் பதினொரு ஆண்டு காலமாக அவருடன் எங்களுக்கு தொடர்பு இருக்கவில்லை. 2014 ஆம் ஆண்டு திடீரென்று அவர் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பப்புவா நியுகினியில் தடுப்பு முகாமில் இருப்பதாக தெரிவித்தார்.
அவருக்கு நான்கு சகோதரர்கள் உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் 27 அம் திகதி தொடர்பு கொண்டு தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும் தடுப்பு முகாமின் அருகாமையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு தனது பிட்டப் பகுதியில் ஊசி போடப்பட்டதாகவும் தெரிவித்தார். பின்னர் அவரிடமிருந்து தொடர்பு இல்லை.
இந்த நிலையில் கடந்த இரண்டாம் திகதி அங்குள்ள ஒருவர் எம்மை தொடர்பு கொண்டு ராஜீவ் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்தார். இவரது மரணத்தில் எமக்கு சந்தேகம் உள்ளது. அவருக்கு ஏற்றிய ஊசியின் காரணமாகவே மரணம் ஏற்பட்டுள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்” என்று தெரிவித்தனர். இதேவேளை நீர்கொழும்பு வைத்தியசாலையில் குறித்த இளைஞனின் சடலத்திற்கு இன்று (16) பிரேதபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் முடிவில் மரணமடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளமை பிரேத பரிசோதனையில் தெரியவந்ததாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர். மரணமடைந்தவரின் உடற்பகுதி மேலதிக விசாரணைக்காக பகுப்பாய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவுஸ்.. உயிரிழந்த யாழ். இளைஞனின் பிரேத பரிசோதனையில் புதுத்தகவல்
Reviewed by Author
on
October 17, 2017
Rating:

No comments:
Post a Comment