பூர்வீக தமிழ் கிராமத்தில் சிங்களக் குடியேற்றம்!
திருகோணமலையில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பகுதியில் நிரந்தர வீடுகள் உட்பட அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு 650இற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.
யான் ஓயா திட்டம் என்ற போர்வையில் குடியேற்றப்பட்டுள்ளன.இந்த குடியேற்றம் மேற்கொள்ளப்பட்ட இடத்திற்கு கோமரங்கடவெல என்று சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன், சிறிலங்கா நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனுமதியுடனேயே இந்த குடியேற்ற திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த குடியேற்றத்தினால், திருகோணமலை மாவட்டத்தின் இனவிகிதாசாரம் பாரியளவில் மாற்றமடையும் அபாயம் காணப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பூர்வீக தமிழ் கிராமத்தில் சிங்களக் குடியேற்றம்!
Reviewed by Author
on
October 17, 2017
Rating:

No comments:
Post a Comment