மன்னாரில் இந்துமாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது...(முழுமையான படங்கள்)
மன்னார் மாவட்டதில்சர்வதேச இந்து இளைஞர் பேரவையும்
மன்னார்
மாவட்ட அறநெறிப்பாடசாலைகளின் இணையமும் இணைந்து நடாத்தும் இந்து மாநாடு
08- 10 - 2017 இன்று காலை 09-00 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தில் இருந்து கலாச்சாரமுறைப்படி நதஸ்வரமேளவாத்திய இசையுடன் இன்னியம் வழங்க நடராசப்பெருமான் பவனியுடன் இடபக்கொடிகளின் நடுவே விழாமண்டபத்தினை விருந்தினர்களை அழைத்துவந்து மாலையணிவித்து நந்திக்கொடி ஏற்றலுடன் இந்து மாநாடு ஆறுமுகநவலர் அரங்கில் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது,
நகரசபை கலாசார மண்டபத்தில் அரங்க நிகழ்வுகள் இரு அமர்வுகளாக நடைபெற்று வருகின்றது. காலை நிகழ்வுகள் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அரங்கில்
நல்லை திருஞானசம்பந்தர் ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த சுவாமிகள் முன்னிலையில்,
மன்னார் அறநெறி பாடசாலைகளின் இணையத்தின் தலைவர் செந்தமிழருவி சிவஸ்ரீ மகா தர்மகுமார குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் யாழ்.பல்கலைகழக விரிவுரையாளர் சட்டத்தரணி கோசலை மதன், கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன்,
வவுனியா தமிழ் சங்க ஸ்தாபகர் தமிழருவி த.சிவகுமாரன்,
கொழும்பு இராமநாதன் கல்லூரி அதிபர் திருமதி கோதை நகுலராஜா, சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஸதாபகர் இலக்கியமணி சி.கணேஸ்குமார்.
ஈலிங் கனக துர்க்கை ஆலய தலைவர் ரீ.யோகநாதன்,
லண்டன் சிவன் கோவில் அறங்காவலர் வி.கணேசமூர்த்தி,
மன்னார் ஆங்கில வள நிலைய முகாமையாளர் எஸ்.சண்முகலிங்கம், மன்னார் சித்தி விநாயகர் இந்துகல்லூரி அதிபர் த.தனேஸ்வரன்,
சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிசானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தொகுப்பு-வை-கஜேந்திரன்
மன்னாரில் இந்துமாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது...(முழுமையான படங்கள்)
Reviewed by Author
on
October 08, 2017
Rating:
No comments:
Post a Comment