வெளிநாட்டில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை தமிழர்....
இத்தாலியில் மிலான் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையின் சைக்கிளோட்ட வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாகனமொன்று மோதியதில் அவர் உயிரிழந்ததாக இத்தாலி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த விபத்தில், இலங்கையைச் சேர்ந்த 39 வயதுடைய இராசரத்னம் சர்வநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சைக்கிளில் பயணித்த குறித்த நபரை வாகனமொன்று மோதியுள்ளது. அத்துடன், வீதியில் விழுந்த அவர் சில மீற்றர் தூரத்துக்கு வீதியில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தை ஏற்படுத்திய வாகனம் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இத்தாலி ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை தமிழர்....
Reviewed by Author
on
October 02, 2017
Rating:

No comments:
Post a Comment