யாழில் 'தமிழ்' அழிந்தால் தமிழ் இனத்தின் அடையாளமும் அழியும்! வடக்கு ஆளுநர்
தமிழ் மக்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்றார்கள். எதிர்காலத்தில் அம்மக்கள் தமது தமிழ் மொழியை மறந்து விடுவார்கள். அவ்வாறான நிலை ஏற்படக்கூடாது என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய தமிழ் தின விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், தமிழ் மக்கள் விடுதலையை வேண்டி போராடுகின்றார்கள். ஆனால் தமது மொழியையும் அவர்கள் பாதுகாக்க வேண்டும்.
\ஒரு இனத்திற்கு அடையாளமே மொழி தான். அந்த மொழி அழிந்து விட்டால் இனமே அழிந்து விடும் என குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தமிழை மறக்கக்கூடாது. அவ்வாறு மறந்தால் எதிர்காலத்தில் தமிழ் இனத்தின் அடையாளமே அழிந்து விடும். இந்த நாட்டில் தமிழ் மொழி பிரதேசத்திற்கு பிரதேசம் மாறுபட்டு காணப்படுகின்றது.
அதிலும் யாழ்ப்பாண தமிழ் தான் சிறந்த தமிழ் என்று கூறுகின்றார்கள். யாழ்ப்பாணத்தில் தமிழ் இல்லாமல் போனால் தமிழின் அடையாளமே அழிந்து போய்விடும். ஆகவே தமிழ் மொழியை மக்கள் பாதுகாக்க வெண்டும் எனவும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
யாழில் 'தமிழ்' அழிந்தால் தமிழ் இனத்தின் அடையாளமும் அழியும்! வடக்கு ஆளுநர்
Reviewed by Author
on
October 16, 2017
Rating:

No comments:
Post a Comment