உலகின் பிரம்மாண்ட விலையுயர்ந்த வீடு விற்பனை: என்ன விலை தெரியுமா?
பிரான்ஸில் அமைந்திருக்கும் உலகின் பிரம்மாண்ட விலையுயர்ந்த வீடு £315 மில்லியனுக்கு விற்பனையாகியுள்ளது. பிரான்ஸின் மத்திய தரைக்கடல் பகுதியான Cote d'Azur-ல் அமைந்துள்ளது Les cedres பங்களா.
35 ஏக்கரில் 18000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த பங்களா வீடு தான் உலகிலேயே விலையுயர்ந்த வீடாகும். 187 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாகும்.
தற்போது இந்த வீடானது £315 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த வீட்டில் மிரளவைக்கும் பல்வேறு பிரம்மாண்ட வசதிகள் உள்ளன, 14 பெட்ரூம்கள் இருக்கும் இந்த வீட்டில் 15000 செடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய நீச்சல் குளம், 30 குதிரைகளை கட்டி வைக்க தொழுவமும் இங்கு உள்ளது, இங்குள்ள எல்லா பொருட்களுமே நினைத்து பார்க்க முடியாத விலையில் அமைந்துள்ளது.
உலகின் பிரம்மாண்ட விலையுயர்ந்த வீடு விற்பனை: என்ன விலை தெரியுமா?
Reviewed by Author
on
October 16, 2017
Rating:

No comments:
Post a Comment