மெர்சலுக்கு மலேசியாவில் கிடைத்த வரவேற்பு! தீபாவளி பண்டிகை ஸ்பெஷல் ரிலீஸாக....
மெர்சல் வரும் புதன்கிழமை தீபாவளி பண்டிகை ஸ்பெஷல் ரிலீஸாக வரவுள்ளது. உலகம் முழுக்க 3200க்கும் அதிகமான தியேட்டர்களில் படம் வெளியாகிறது.
பல சிக்கல்களை தாண்டி படம் சில சாதனைகளை முன்பே இணையதளங்களில் செய்துவிட்டது. தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கும் 100 வது படம், விஜய்க்கு 25ம் வருடம் என சில சிறப்புகளையும் இப்படம் கொண்டுள்ளது.
தமிழர்களின் கலாச்சாரம் பற்றிய விசயங்களும் இருக்கும் என்பது டீசர், போஸ்டர், பாடல் மூலம் நமக்கு முன்பே தெரிந்துவிட்டது அதனால் உலகம் முழுக்கு நல்ல வசூலை இது பெறும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இந்நிலையில் தமிழர்கள் அதிகம் வாழும் மலேசிய நாட்டில் மட்டும் 800 தியேட்டர்களில் மெர்சல் வெளிவருகிறதாம். இது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
மெர்சலுக்கு மலேசியாவில் கிடைத்த வரவேற்பு! தீபாவளி பண்டிகை ஸ்பெஷல் ரிலீஸாக....
Reviewed by Author
on
October 16, 2017
Rating:

No comments:
Post a Comment