மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி.யை விமர்சிக்க அனைத்து உரிமைகளும் உள்ளன: கபில் சிபல் கருத்து
காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கபில் சிபல், மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருக்கிறார்.
நடிகர் விஜய் நடித்து அண்மையில் வெளியான மெர்சல் படத்தில் மோடி அரசின் ஜி.எஸ்.டி. குறித்து கடுமையாக விமர்சித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கபில் சிபல், மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், “சுதந்திரமான பேச்சில் எது சரி, எது தவறு? என்பது குறித்து புதிய விளக்கத்தை நம்மிடையே திணிக்க பா.ஜனதா முயற்சிக்கிறது. விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா ஆகியவற்றை விமர்சிக்க அத்தனை உரிமைகளும் உள்ளன” என்று குறிப்பிட்டு உள்ளார்.
மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி.யை விமர்சிக்க அனைத்து உரிமைகளும் உள்ளன: கபில் சிபல் கருத்து
Reviewed by Author
on
October 22, 2017
Rating:

No comments:
Post a Comment