ஓர் அங்குலம் கூட இனிக் கீழிறங்க முடியாது! கூட்டமைப்பு திட்டவட்டம்!
புதிய அரசமைப்புத் தொடர்பாக வெளியாகி இருக்கும் இடைக்கால அறிக்கையில், கூறப்பட்டுள்ள விடயங்களிலிருந்து ஓர் அங்குலம் கூட இனிக் கீழிறங்க முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிகாரிகளுடனான சந்திப்பு குறித்து விளக்கமளிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து.
தெரிவிக்கையில்,“எமது நிலைப்பாட்டிலிருந்து நாம் ஏற்கனவே கீழிறங்கி வந்துள்ளோம். தீர்க்கமான முடிவு எட்டப்படாமல் தெரிவுகளுக்கு விடப்பட்டுள்ள மூன்று விடயங்கள் தொடர்பில் சாதகமான முடிவு கிடைத்தால் மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி வரைவை ஏற்கும். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும், மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை எந்தச் சந்தர்ப்பத்திலும் கொழும்பு திருப்பி எடுக்க முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான பொறிமுறை, நிதி அதிகாரம் மாகாணங்களுக்கு முழுமையாக வழங்கப்படவேண்டும் .
ஆகிய மூன்று கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே புதிய அரசமைப்புக்கு ஆதரவு எனவும் கூட்டமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களிலி ருந்து ஓர் அங்குலம்கூட இனிக் கீழிறங்க முடியாது.
எமது நிலைப்பாட்டிலிருந்து நாம் ஏற்கனவே கீழிறங்கி வந்துள்ளோம். இடைக்கால அறிக்கையில் சில விடயங்கள் தெரிவுக்காக விடப்பட்டுள்ளன. அவை எமக்கு முற்று முழுதாகச் சார்பாக வர வேண்டும். முக்கியமாக மூன்று விடயங்கள் எமக்குச் சாதகமாக அமைய வேண்டும்.
வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்ட ஒரு மாகாணமாக இருத்தல், வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப் பெற முடியாது என்ற பொறிமுறை இறுக்கமானதாகக் குறிப்பிடப்படல், மாகாணங்களுக்கு நிதி அதிகாரம் முழுமையாக வழங்கப்படுதல் என்ற மூன்று விடயங்களும் எமக்குச் சாதகமாக இருக்க வேண்டும்.” என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
ஓர் அங்குலம் கூட இனிக் கீழிறங்க முடியாது! கூட்டமைப்பு திட்டவட்டம்!
Reviewed by Author
on
October 08, 2017
Rating:

No comments:
Post a Comment