அண்மைய செய்திகள்

  
-

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வடக்கு சுகாதார அமைச்சர் திடீர் விஜயம்-வைத்தியசாலையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்வு-(படம்)


மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் மற்றும் அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் இன்று செவ்வாய்க்கிழமை மதியம்(3) மாவட்ட பொது வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

-இதன் போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யூட் ரதனி, மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் திருமதி அன்ரன் சிசில் உற்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

-இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சகல பிரிவுகளினதும் தற்போதைய நிலை தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனினால் நேரடியாக பார்வையிட்டார்.

இதன் போது மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையில் காணப்படுகின்ற நீண்ட நாள் குறைபாடுகள் மற்றும் உடனடியாக தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலை தரப்பிரனுடன் அமைச்சர் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

-இதே வேளை உடனடியாக தீர்க்கக்கூடிய பிரச்சினைகளை வெகு விரைவில் தீர்த்து வைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அறிவூறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்ததோடு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தரத்தையும், மேலதிக வசதிகளையும் உருவாக்குவதற்கான பெரிய திட்டங்கள் தொடர்பாக ஆலோசித்திருப்பதாகவும், உருவாக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி உதவிகளை வழங்குகின்ற நாடுகளோடும், சுகாதார அமைச்சுடனும் தொடர்பு கொண்டு எதிர் வரும் காலங்களில் குறித்த திட்டங்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மேலும் தெரிவித்தார்.












மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வடக்கு சுகாதார அமைச்சர் திடீர் விஜயம்-வைத்தியசாலையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்வு-(படம்) Reviewed by NEWMANNAR on October 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.