அண்மைய செய்திகள்

  
-

உலக சாதனை படைக்கவுள்ள இலங்கை தாய்!


இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் உலக சாதனைகள் படைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 20 பிள்ளைகளை பெற்ற தாயொருவர் உலக சாதனை படைத்துள்ளாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.

கலேவெல பம்பரகஸ்வெவ கட்டுபொத்த பிரதேசத்தை சேர்ந்த ஹஸ்திமு ஆராச்சிலாகே ரொசலின் என்ற தாயே இந்த உலக சாதனைக்கு சொந்தக்காரராகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிகமான பிள்ளைகள் பெற்று உயிர் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்த தாய்க்கு 19 பிள்ளைகளே உள்ளதாக, தேசிய முதியோர் செயலகத்தின் இயக்குனர் சிங்கப்புலி தெரிவித்துள்ளார். எனினும் இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் அதிக குழந்தைகளை பெற்ற தாயாக இவர் கடந்த முதியோர் தினத்தன்று கௌரவிக்கப்பட்டுள்ளார்.

80 வயதுடைய இந்த தாயின் 20 பிள்ளைகளின் 15 பிள்ளைகள் தற்போது உயிருடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது மூத்த மகளுக்கு தற்போது 60 வயதாகின்ற நிலையில் கடைசி பிள்ளைக்கு 30 வயதாகின்றது. அவரது 5 பிள்ளைகள் பெரியவர்களாகிய பின்னர் பல்வேறு நோய்களின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 15 வயதில் 21 வயது நபரை திருமணம் செய்த இந்த தாயர் ஒவ்வொரு வருடமும் ஒரு குழந்தையை பெற்றுள்ளார். தற்போது அவருக்கு பிள்ளைகள், பேரபிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என 151 பேர் உள்ளனர்.


உலக சாதனை படைக்கவுள்ள இலங்கை தாய்! Reviewed by Author on October 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.