அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் கண்டுபிடித்த அதிசயம்!


உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிக தேவையுடையதான விசேட பழம் ஒன்று நுவரெலியாவில் காய்த்துள்ளது.
பெப்பினோ என்ற மருத்துவ பழம் ஒன்றே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளது.
நுவரெலியா, ஹாவாலெிய பிரதேசத்தை சேர்ந்த ஹெட்டிஆராச்சி மற்றும் ஜயந்த பெரேரா ஆகிய இரண்டு இளைஞர்களினால் இணையத்தளத்தின் ஊடாக மேற்கொண்ட சோதனையின் பின்னர் இந்த பழம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மிளகாய் இலைக்கு சமமான இலையின் செடியிலேயே இந்த பழம் காய்த்துள்ளது. ஒரே செடியில் 3 அல்லது 4 காய்கள் காய்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில சந்தர்ப்பங்களில் தோட்ட பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் சமைப்பதற்கு கொண்டு செல்வதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் ஆராய்ந்த போது, நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருந்தாக அந்த பழம் காணப்படுகின்றது.

இந்த பழத்தை வெட்டி உண்ணும் போது நீர் தன்மை மற்றும் புளிப்பு தன்மை ஒன்று காணப்படும். எனினும் பழம் பழுத்தவுடன் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதோடு, தேன் போன்ற சுவை காணப்படும்.
  பல மருத்துவ நன்மை கொண்ட இந்த பழத்தில் பல நோய்களை குணப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீரழிவு நோய், இருந்த நோய், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக இந்த பழம் காணப்பட்டுள்ளது.

பல்வேறு மருத்துவ தேவைக்கு பயன்படுத்தும் இந்த பழம் இலங்கையில் கிடைப்பது சாதாரண விடயமல்ல. இதனை பெற்றுக்கொள்ள பல நாடுகள் முயற்சித்து வருவதாக தெரிய வருகிறது.
இலங்கையில் கண்டுபிடித்த அதிசயம்! Reviewed by Author on October 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.