இமயமலையில் நடிகர் ரஜினிகாந்தின் ஆசிரமம்
நடிகர் ரஜினிகாந்த் ஆண்டுதோறும் தன்னுடைய நண்பர்களுடன் இமயமலையில் உள்ள மகா அவதார் பாபாஜி குகைக்கு செல்வது வழக்கம்.உடல்நலக்குறைபாடு, புதுப்பட வேலைகள் காரணமாக சில ஆண்டுகளாக செல்லவில்லை.
இந்நிலையில் நவம்பர் மாதப் பகுதியில் பாபாஜி குகை அமைந்திருக்கும் துவாராஹாட் பகுதியில் கடும் பனிப்பொழிவு இருக்கும், மார்ச் மாதம் வரையிலும் கூட அங்கே சென்று திரும்புவது கடினம்.
குகைக்கு செல்லும் பக்தர்கள் அப்பகுதியில் தங்க விரும்பினாலும் இடமில்லை, 275 கி.மீ பயணம் செய்ய வேண்டிய சூழல் இருந்தது. எனவே தனது நண்பர் மூலம் பாபாஜி குகைக்கு அருகே ஆசிரமம் கட்டும் பணியை ரஜினி மேற்கொண்டார். கட்டிட வேலைகள் முடிந்துள்ள நிலையில் நவம்பர் 10ம் திகதி திட்டமிட்டபடி ஆசிரமத்தை திறக்க ரஜினி சம்மதம் தெரிவித்துள்ளார். புதுப்பட வேலைகள் இருப்பதால் தன்னால் கலந்து கொள்ள முடியாது என்றும், மார்ச் மாதம் கண்டிப்பாக வருகிறேன் எனவும் உறுதியளித்துள்ளார்.
இமயமலையில் நடிகர் ரஜினிகாந்தின் ஆசிரமம்
Reviewed by Author
on
October 27, 2017
Rating:

No comments:
Post a Comment