அண்மைய செய்திகள்

recent
-

பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞன் - உறவினர்களின் கதறலால் சோகமயமானது சுவிஸ்


சுவிட்சர்லாந்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞனின் இறுதி கிரியைகள் இன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது.பகுதி பெரும் சோகமயமானது.

கிளிநொச்சியை சேர்ந்த 38 வயதான சுப்பிரமணியன் கரன் என்ற இளைஞனின், சுவிஸ் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அவரின் இறுதிக்கிரியை நிகழ்வில் பங்கேற்பதற்காக கரனின் மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதரன் சுவிஸ் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதற்கான உதவிகளை சுவிஸ் அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் கரனின் உறவினர்கள் கத்திக் கதறியழ, அவரது இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
 சுவிட்ஸர்லாந்தின் டிசினோ மாகாணத்திலுள்ள அகதிகள் இடைத்தங்கல் முகாமொன்றில் கரன் தங்கவைக்கப்பட்டிருந்தார். அங்கு அகதிகளுக்கு இடையில் முறுகல் நிலை வன்முறையாக மாறியது.

கரன் அங்கிருந்த அகதிகளை கத்தியால் தாக்க முற்பட்டதாகவும் அதனால் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் டிசினோ மாகாண பொலிஸார் கூறியுள்ளனர்.

அவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.இந்நிலையில் கரனின் உயிரை பறிக்க வேண்டிய தேவை இல்லையென குறிப்பிட்டுள்ள உறவினர்கள், சுவிஸ் அரசாங்கம் இதற்கு நீதியை பெற்றுத்தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞன் - உறவினர்களின் கதறலால் சோகமயமானது சுவிஸ் Reviewed by Author on October 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.