அண்மைய செய்திகள்

recent
-

உலகளவில் அதிகளவு மரணங்கள் இதனால் தான்: அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு


அமெரிக்காவின் ஆய்வறிக்கை ஒன்று நோய், வன்முறை, பேரிடர் ஆகியவற்றை விட சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஏற்படும் மரணங்களே உலகில் அதிகம் என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

2015ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, உலகளவில் இறக்கும் ஆறில் ஒருவர் மாசுபாட்டால் உண்டாகும் நோய் காரணமாகவே இறந்ததாக லான்சட் மருத்துவ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நியூயார்க்கின் இகான் மருத்துவ பள்ளியின் தலைமை மருத்துவர் கூறுகையில், ஒன்பது மில்லியன் மக்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டல் மட்டுமே 2015ம் ஆண்டில் உயிரிழந்துள்ளனர். அவற்றில் இந்தியாவில் 2.5 மில்லியன் மற்றும் சீனாவில் 1.8 மில்லியன் இறப்புகள் ஆகும்.

இந்த இறப்புகள் புகைப்பிடித்தல், நோய்கள் மற்றும் சாலை விபத்துக்கள் மூலம் ஏற்படுவதை விடவும் அதிகமாகும்.

மேலும் வன்முறைகளால்இறப்பவர்களை விட இது 15 மடங்கு அதிகமாகும் எனவும் கூறியுள்ளார்.

உலகளவில் அதிகளவு மரணங்கள் இதனால் தான்: அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு Reviewed by Author on October 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.