போர் விமானங்களில் முதல் மூன்று பெண் விமானிகள் நியமனம்: டிசம்பர் மாதம் விமானப்படையில் சேர்ப்பு
இந்திய விமானப்படையின் முதல் பெண் போர் விமான விமானிகளாக தேர்வு செய்யப்பட்ட 3 பேரும், டிசம்பர் மாதம் முறைப்படி பணி நியமனம் பெற்று பணியைத் தொடங்கப் போவதாக விமானப்படை தளபதி பி.எஸ். தனோயா தெரிவித்தார்.
இந்திய விமானப்படையில் போர் விமானங்களை இயக்கும் பணியில் பெண்களையும் நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட 6 பெண் விமானிகளில் பாவனா காந்த், அவனி சதுர்வேதி, மோகனா சிங் ஆகிய 3 பேர் வெற்றிகரமாக தங்களது பயிற்சியை நிறைவு செய்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு அவர்கள் மூவரும் போர் விமானங்களில் பணியாற்றும் பொறுப்பில் இணைக்கப்பட்டு, கடினமான பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இவர்கள் மூவரும் வருகின்ற டிசம்பர் மாதம் போர் விமான விமானிகளாக முறைப்படி நியமனம் செய்யப்பட்டு பணியைத் தொடங்க உள்ளனர். இந்திய விமானப்படையின் தளபதி பி.எஸ்.தனோயா டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
போர் விமானிகளாக பெண்கள் பணி நியமனம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இவர்கள் மூவரும் பொறியியல் பட்டதாரிகள் ஆவர். பெண்கள் அனைத்து துறையிலும் சாதித்து வரும் நிலையில் போர் விமானங்களின் விமானிகளாக பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுகோய் மற்றும் தேஜாஸ் போன்ற போர் விமானங்களை இயக்குவார்கள் என கூறப்பட்டுள்ளது.
போர் விமானங்களில் முதல் மூன்று பெண் விமானிகள் நியமனம்: டிசம்பர் மாதம் விமானப்படையில் சேர்ப்பு
Reviewed by Author
on
October 06, 2017
Rating:

No comments:
Post a Comment