பெண்கள் பாதுகாப்பாக இங்கு வாழலாம்! நகரங்களின் பட்டியல் வெளியானது
"உலகிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த நகரங்களின் பட்டியலில் ஜப்பானின் டோக்கியோ முதலிடம் பிடித்துள்ளது.
உலகப் பிரபலம் வாய்ந்த 19 நகரங்களில் பெண்கள் பாதுகாப்பாக வாழவும், வாழ முடியாத நகரங்கள் குறித்தும் THOMSON REUTERS FOUNDATION ஆய்வு நடத்தியது.
இதில் ஜப்பானின் டோக்கியோ முதலிடம் பிடித்துள்ளது, லண்டன் நகரத்திலும் பெண்கள் தோழமை உணர்வுடன் மதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
மிக மோசமான நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் டெல்லி இடம்பிடித்துள்ளது, கடந்த 2012ம் ஆண்டு முதல் 2155 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.இதனை தொடர்ந்து பிரேசிலின் சாவ் பாவ்லோ, பிரேசிலியா இடம்பெற்றுள்ளன.
பெண்களுக்கு மிக ஆபத்தான நகரமாக எகிப்தின் கொய்ரோ விளங்குகிறது, அங்கு பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளும் நடப்பது தெரியவந்துள்ளது.
பெண்கள் பாதுகாப்பாக இங்கு வாழலாம்! நகரங்களின் பட்டியல் வெளியானது
Reviewed by Author
on
October 18, 2017
Rating:

No comments:
Post a Comment