பார்வையற்றவர்கள் உலகை காண மூன்றாவது கண் கண்டுபிடிப்பு!
முற்றிலும் பார்வையற்றவர்களுக்காக செகண்ட் சைட் எனும் நிறுவனம் ‘பயோனிக் ஐ’ என்ற பெயரில் சாதனை கண்டுபிடிப்பு ஒன்றை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பயோனிக் ஐ சாதனத்தின் மூலம் பார்வை பறிபோனவர்களுக்கு மீண்டும் பார்வையைளிக்க முடியும் என்பதை பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதனை நிரூபித்துள்ளனர். லண்டன் அரசாங்கத்தின் தேசிய சுகாதார சேவையின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட பார்வை பறிபோன பத்து பேருக்கு கண் பார்வையளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவ சிகிச்சை இரண்டு மருத்துவமனைகளில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
அதிவேகமாக காட்சிகளை படமாக்கும் 500 பிக்ஸல்ஸ்களை கொண்ட நவீன கேமரா, படமாக்கப்பட்ட புகைப்படங்களை திறன்பட மூளைக்கு பரிமாற்றம் செய்ய சிப்செட்கள் மற்றும், காட்சியை மூளை மண்டலத்துக்கு அனுப்பி, பிம்பமாக்கி பார்வையை வழங்கும் அதிநவீன கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, பார்வை பறிபோனவர்களுக்கும் பார்வையை வழங்க இந்த ‘பயோனிக் ஐ’ உதவுகின்றது.
அறுவை சிகிச்சை மூலம் பயோனிக் ஐ பொருத்தப்பட்டு பயோனிக் ஐ மூலம் படமாக்கப்பட்ட புகைப்படங்கள் மூளையின் பார்வையை வழங்கும் நரம்புகளுக்கு அனுப்புகிறது பின் மூளையில் இருந்து பயனர் ஒளியின் மூலம் காட்சிகள் பிரதிபலிக்கப்படுகின்றன.
இந்த புதிய முறையின் மூலம் மீண்டும் கண்பார்வையை வழங்கும் பரிசோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் இதில் பயோனிக் ஐ பொருத்தப்பட்ட சிலரால் பெரிய எழுத்துகளையும் பார்க்க முடிந்தது என மான்செஸ்டர் மருத்துவமனையின் பேராசிரியர் பாலோ ஸ்டங்கா தெரிவித்துள்ளார்.

பார்வையற்றவர்கள் உலகை காண மூன்றாவது கண் கண்டுபிடிப்பு!
Reviewed by Author
on
November 08, 2017
Rating:

No comments:
Post a Comment