வாய்வுத் தொல்லையை போக்கும் உணவுகள்....
செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும் போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும் போது காற்று அதிகமாக உடலில் உருவாகி வாய்வுத் தொல்லையை ஏற்படுத்துகிறது.
இந்த வாய்வுத் தொல்லையை குணமாக்க ஒருசில உணவுகளை சாப்பிட்டாலே போதும்.
சூரிய காந்தி இலைகள்
சூரிய காந்தி இலைகள் முழுமையான ஜீரண சக்தியை தூண்டுவதால் வாய்வு உருவாவதை தடுக்கிறது. எனவே வாய்வு பிரச்சனை இருக்கும் போது சூரிய காந்தி இலைகளை சாப்பிடலாம்.
பப்பாளி
வாயு உருவாகும் நேரத்தில் பப்பாளி பழத்தில் ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டால், அது வாயுவை சமன் செய்து ஜீரண அமிலங்களை முறையாக தூண்டி வாய்வை தடுக்க உதவுகிறது.
மசாலா பொருட்கள்
சீரகம், ஏலக்காய், சோம்பு போன்றவை வாய்வுத் தொல்லைக்கு மிகச் சிறந்த நிவாரணியாகும். எனவே வாய்வு தொல்லை ஏற்பட்டவுடன் இவற்றை வெறும் வாயில் மென்று சாப்பிட வேண்டும்.
சீமை சாமந்தி டீ
சீமை சாமந்தி டீ பேக்கை வாங்கி நீரில் போட்டு தேநீர் போன்று தயாரித்து அதை குடித்து வந்தால், வாய்வுத் தொல்லை வராமல் தடுக்கலாம்.
வாழைப்பழம்
வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் உடனடியாக வாழைப்பழத்தைஒ உடனே சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
தேங்காய்
தேங்காய் துருவலை சாப்பிடலாம் அல்லது தேங்காய் நீர் அல்லது தேங்காய் பாலை குடிப்பதால் வாய்வு தொல்லை குணமாகிவிடும்.
பேரிக்காய்
பேரிக்காய் ஜீரண சக்தியை தூண்டி வாய்வை தடுக்கும். எனவே தினமும் 1 பேரிக்காய் சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை உண்டாகாது.
செர்ரி பழங்கள்
செர்ரிப் பழங்கள் வயிற்றுப் பாதிப்புகளை சரி செய்யும் ஆன்டி இன்ஃபளமெட்ரி பண்புகளை கொண்டுள்ளது. எனவே இதனை சாப்பிடுவதால் வாய்வுக் கோளாறுகள் நீங்குவதோடு ஜீரண மண்டலம் வலிமையாகும்.
வாய்வுத் தொல்லையை போக்கும் உணவுகள்....
Reviewed by Author
on
November 08, 2017
Rating:

No comments:
Post a Comment