2018 ‘ பட்ஜட்’ – வடக்குக்கான அபிவிருத்தித் திட்டங்கள்"
- முக்கோண பொருளாதார வலயம் அமைக்கப்படவுள்ளது. தம்புள்ளை மற்றும் கொழும்புடன் இணைக்கப்பட்ட நவீன பொருளாதார மையமொன்று, யாழ்ப்பாணத்தில் நிறுவப்படவுள்ளது. இதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
* நெடுந்தீவு மற்றும் கிளிநொச்சியில் இரண்டு உணவு பதனிடும் நிலையங்கள் உருவாக்கப்படும். இவற்றில் தாவர உயிர்பச்சை அடிப்படையிலான பனங்கருப்பட்டி, பனம்பழம் மற்றும் பனங்கிழங்கு என்பன சிறப்பாக பதனிடப்படும். இதற்கு 40 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*மயிலிட்டித் துறைமுகமானது மீன்பிடித் துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படும். போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் பாரம்பரியமாக வாழ்பவர்கள் தமது வாழ்வாதாரங்களை மீள ஆரம்பிப்பதற்கு ஆதரவளிக்கப்படும். மீனவர்கள் தமது மீன் உற்பத்திகளை களஞ்சியப்படுத்துவதற்கும் வசதியளிக்கும் வகையில் குளிர் அறைகள் மற்றும் களஞ்சியங்கள் அரசினால் நிறுவப்படும். இதற்கு 150 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
*தற்போது அச்சுவேலி கைத்தொழில் வலயத்தில் 50 சதவீதம் மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றது. இந்த வலயத்தில் தொழில் முயற்சிகளை ஆரம்பிக்கும் நிறுவனங்களின் மாதாந்த மின்சாரக் கட்டணத்தில் 50 சதவீதத்தை 2 வருடங்களுக்கு அரசு பொறுப்பேற்பதோடு இந்த வலயத்தின் பொது வசதிகளும் மேம்படுத்தப்படும்.
*பொலன்னறுவை, இரத்தினபுரி மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் விவசாய விளைபொருள்களைச் சேமித்து வைக்கக் கூடிய வகையில் 3 பண்டகசாலைகளின் கட்டுமான வேலைகள் பூர்த்தி செய்வதற்கு 250 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
*சிலாபம், மிரிஸ்ஸ, காரைநகர் மற்றும் புரணவெல்ல மீன்பிடித் துறைமுகங்களை மேம்படுத்த முதலீடு செய்யும் அதேவேளை, மீன்பிடித் துறைமுகங்களில் இறங்கு துறைகள் மற்றும் நங்கூரமிடும் தளங்களை விருத்தி செய்து இற்றைப்படுத்தல் செய்வதற்கு ஆயிரத்து 750 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
*ஏற்றுமதிச் சந்தைகளில் நிலவும் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளுக்கான கேள்வியை கருத்திற் கொண்டு கிளிநொச்சி மாவட்டத்தில், பூநகரிப் பிரதேசத்தில் முழுமையான பின்தள இருப்பு வலையம் அமைக்கப்படவுள்ளது. இதனுள் தனியார் துறையினர் கடலட்டைகளை அறுவடை செய்யவும் பதப்படுத்தல் செய்யவும் இடத் துண்டங்கள் வழங்கப்படவுள்ளது.
* தனியார் துறையினதும் மற்றும் தொல்பொருளியல் திணைக்களத்தினதும் ஆதரவுடன் சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தினால் மாத்தறை, அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை பிரெட்றிக் கோட்டை, மன்னார் கோட்டை . அல்லி இராணிக் கோட்டை மற்றும் கற்பிட்டி கோட்டை உள்ளடங்கலாக 6 கோட்டைகள் அபிவிருத்தி செய்வதற்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
*யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகமானது சகல வசதிகளையும் கொண்ட நூலகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிலையம் என்பவற்றினை அமைப்பதன் மூலம் மேலும் வலுப்படுத்தப்படும். இதற்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
*நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலும் காணப்படுகின்ற சிறுநீரக நோய் அதிகரிப்பினை கவனத்திற் கொண்டு பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகங்களில் அதி நவீன இயந்திரங்கள் (ஈஎஸ்டபிள்யூஎல்) மூன்றுடன் சிறப்பு சிறுநீரகத் தொகுதிகளும் தாபிக்கப்படும். இதற்கு 450 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
*கிளிநொச்சி, தெல்தெனிய, பூகொடை மற்றும் கந்தளாய் நீதிமன்றக் கட்டிடத் தொகுதிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்படுவதனூடாக இந்த நீதிமன்றங்களில் காணப்படும் நெரிசல் மற்றும் வசதிக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும். இதற்கு 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*நல்லிணக்கத்தினை முதன்மைப்படுத்திய வாழ்வாதார அபிவிருத்தி, பொருளாதார வலுவூட்டல் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு அரசு ஆதரவளிக்கும். இது வடக்கிலுள்ள மாற்றுத் திறனாளி பெண்களுக்கான சிறப்பு நிலையம் நிர்மாணிக்கப்படுவதையும் உள்ளடக்கியதாகும். இதற்காக 2 ஆயிரத்து 750 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
*மன்னார் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துக்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*மன்னார் தாழ்வுப்பாட்டில் கலாசார மண்டபம் அமைக்க 25 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
2018 ‘ பட்ஜட்’ – வடக்குக்கான அபிவிருத்தித் திட்டங்கள்"
Reviewed by Author
on
November 10, 2017
Rating:

No comments:
Post a Comment