கல்லீரல் பாதிப்பினால் இந்த பிரச்சனைகள் வருமாம் -
அவற்றில் கல்லீரலின் செயல்பாடுகளும், அதன் பணிகளும் இன்றியமையாததாக இருக்கிறது. இத்தகைய கல்லீரலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் நம் உடலில் என்னென்ன நோய்கள் ஏற்படும் தெரியுமா?
கல்லீரல் பாதிப்பினால் ஏற்படும் நோய்கள்?
- கல்லீரலின் திசு அணுக்கள் வீக்கம் அடைவதால் கல்லீரல் வீக்கம் அடையும். இது கல்லீரல் பாதிப்பின் ஒரு அறிகுறியாகும்.
- கல்லீரலில் இழை நார் வளர்ச்சி என்பது ஒரு நோய். கல்லீரல் திசுவானது, சேதமடைந்த திசுவை மீண்டும் உருவாகும் செயல்முறையில் ஏற்படும் கட்டிகள் கல்லீரல் செயல் இழப்பை ஏற்படுத்துகிறது.
- கல்லீரல் பாதிப்பினால் உடலில் அதிகளவு அம்மோனியா உற்பத்தி உருவாகி வாயில் இருந்து வீசும் கடுமையான துர்நாற்றம் மற்றும் சருமத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
- உடலில் இருந்து வெளியேறும் கழிவுகளின் நிறம் அடர்த்தியாக மாறுதல், ஆகியவை கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகளாகும்.
- கல்லீரலில் பைல் எனும் நொதி அதிகளவு உற்பத்தி ஆவதால், வாயில் அதிக கசப்பு தன்மை, வயிற்றின் அடிப்பகுதி வீக்கம் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
- பசியின்மை, உடல் சோர்வு, எடை குறைதல், ரத்தவாந்தி, ரத்தம் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் கல்லீரல் பதிப்பினால் ஏற்படலாம்.
- கல்லீரலை நோய் கிருமிகள் தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும் போது, மூளைக்கோளாறு, அதன் செயல் இழப்பால் மனக்குழப்பம், சுய உணர்வு நிலை தடுமாறுதல், கோமா நிலை போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.
கல்லீரல் பாதிப்பை தடுக்க என்ன செய்யலாம்?
கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கீரை வகைகள், பூண்டு, தேன், பீட்ரூட், தேங்காய் எண்ணெய் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட வேண்டும்.
கல்லீரல் பாதிப்பினால் இந்த பிரச்சனைகள் வருமாம் -
Reviewed by Author
on
November 10, 2017
Rating:

No comments:
Post a Comment