30 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து: 18 பேர் உயிரிழப்பு -
சீனாவில் நிலவிவரும் கடும் பனிமூட்டத்தால் இன்று தேசிய நெடுஞ்சாலையில் 30 வாகனங்கள் ஒன்றோடொன்று வரிசையாக மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள அன்ஹுயி மாகாணத்தில் தற்போது பனிப்பொழிவும், பனிமூட்டமும் கடுமையாக உள்ளது. இந்நிலையில் இங்குள்ள ஃபுயாங் நகரில் உள்ள தேசிய விரைவு நெடுஞ்சாலை இன்று பனிப்படலத்தால் மூடப்பட்டிருந்தது.
இந்த பனிமூட்டத்துக்கு இடையில் அவ்வழியாக சென்ற சுமார் 30 வாகனங்கள் ஒன்றோடொன்று வரிசையாக மோதிக்கொண்ட விபத்தில் பல வாகனங்கள் தீபிடித்து எரிந்தன.
இந்த கோர விபத்தில் 18 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவரும் 21 பேரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு மட்டும் 180,000 எண்ணிக்கையில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 58,000 மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாலை விதிகளை மீறுவதாலையே 90 சதவிகித விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்டு மாதம் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 36 பேர் கொல்லப்பட்டதுடன் 13 பேர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
30 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து: 18 பேர் உயிரிழப்பு -
Reviewed by Author
on
November 16, 2017
Rating:

No comments:
Post a Comment