பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்
பெண் தலைமைத்துவக் குடும்பங்களினுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறிய 42ஆயிரத்து 926 குடும்பங்களில் 6246 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளடங்குகின்றன.
அதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலர் பிரிவுகளிலும் 6246 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும், 2296 மாற்றுத்திறனாளிகளும் வாழ்ந்து வருவதாக மாவட்டச் செயலகத்தின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரச் செயற்பாடுகள் தொடர்பில் மாவட்ட அரச அதிபர் கருத்துத் தெரிவிக்கும் போது,
மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற வீட்டுத் திட்டங்கள், மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள், என்பவற்றில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான செயற்திட்டங்களை வைத்து அதிகளவான குடும்பங்கள் தமது வருமானத்தைப் பெருக்கி தமது வாழ்வாதாரரத்தைக் கொண்டு செல்கின்றனர்.
இதேவேளை, தொடந்தும் வருகின்ற திட்டங்களில் இவ்வாறு பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்
Reviewed by Author
on
November 16, 2017
Rating:

No comments:
Post a Comment