ஆங்கிலத்தில் புதிய வார்த்தையை உருவாக்கி சாதனை படைத்த 6 வயது சிறுவன் -
ஆங்கிலத்தில் உள்ள வார்த்தைகளை திருப்பி எழுதும் போது வேறு வார்த்தை உருவானால், அதனை குறிப்பிட்டு சொல்வதற்கு வார்த்தை இல்லை.
அதனைக் குறிப்பிடுவதற்கு ‘லெவிடிரோம்’ என்ற புதிய வார்த்தையை லெவி என்ற சிறுவன் கண்டுபிடித்துள்ளான்.
இந்த வார்த்தை ‘stressed-desserts' போன்ற திருப்பி எழுதினாலும் அர்த்தம் தரக்கூடிய வார்த்தைகளை பொதுவாக குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும்.
லெவியின் பெற்றோர், இந்த வார்த்தை ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் இடம் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால், குறிப்பிட்ட
காலத்திற்கு, மக்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தினால் மட்டுமே, ஆக்ஸ்போர்டு அகராதியில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டது.
சிறுவனின் கண்டுபிடிப்பிற்கு அனைவரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். மேலும், இந்த வார்த்தை அகராதியில் இடம் பெற பலரும் அதற்கு உதவி வருகின்றனர்.
விரைவில், இந்த வார்த்தை அகராதியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் புதிய வார்த்தையை உருவாக்கி சாதனை படைத்த 6 வயது சிறுவன் -
Reviewed by Author
on
November 29, 2017
Rating:

No comments:
Post a Comment