வடக்கு, கிழக்கில் மாவட்ட நீதிபதிகள் 7 பேருக்கு மாற்றம்.....
வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாவட்ட நீதிபதிகள் 7 பேருக்கு வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இடமாற்றம் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று நீதிசேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.வவுனியா மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாகவும், சாவகச்சேரி மாவட்ட நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், வவுனியா மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றலாகின்றனர்.
யாழ்ப்பாண மாவட்ட நீதிபதி ஜே.கஜநிதிபாலன் சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும், கல்முனை மாவட்ட நீதிபதி வி.இராமகமலன், யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றலாகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுடின், மூதூர் மாவட்ட நீதிபதியாகவும், மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா கல்முனை மாவட்ட நீதிபதியாகவும் மாற்றலாகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் எம்.கணேசராஜா, மன்னார் மாவட்ட நீதிபதியாக இடமாற்றாலாகின்றார்.
வடக்கு, கிழக்கில் மாவட்ட நீதிபதிகள் 7 பேருக்கு மாற்றம்.....
Reviewed by Author
on
November 09, 2017
Rating:

No comments:
Post a Comment