தூக்கமின்மை தொடர்பில் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட் அதிர்ச்சி தகவல் -
இரவு நேரங்களில் படுக்கையில் இருந்தவாறும் தொடர்ச்சியாக ஸ்மார்ட் சாதனங்களை பயன்படுத்துவது இன்று வெகுவாக அதிகரித்துள்ளது.
இதனால் சீரான தூக்கமின்மை காரணமாக பல்வேறு உடல் நலக் குறைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படுகின்றது. சீரான தூக்கமின்மை தொடர்பிலும் பல்வேறு ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இவ்வாறிருக்கையில் தற்போது மற்றுமொரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதாவது தூக்கமின்மை காரணமாக மூளையின் செயற்பாடு பலமிழப்பதுடன் ஞாபகத் தன்மையும் பாதிக்கப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது தூக்கமின்மையானது அளவுக்கு அதிகமாக மது அருந்துவதற்கு ஒப்பானது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ் ஆராய்ச்சியினை லாஸ் ஏஞ்சலில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணர்கள் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூக்கமின்மை தொடர்பில் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட் அதிர்ச்சி தகவல் -
Reviewed by Author
on
November 09, 2017
Rating:

No comments:
Post a Comment