சிரியா: ரஷ்யா ராணுவ தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 26 பேர் பலி....
சிரியாவில் ரஷ்ய ராணுவத்தினர் நடத்திய வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிரியாவில் சில முக்கிய நகரங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாடுக்குள் வைத்துள்ளனர். அந்த தீவிரவாதிகளை ஒடுக்க ரஷ்யாவுடன் இணைந்து சிரியா ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் சில நேரங்களில் பொதுமக்களும் தாக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். அவ்வாரு நடத்தப்படும் தாக்குதல்கள் மூலம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இடங்களை சிரிய ராணுவம் கைப்பற்றி வருகிறது.
கிழக்கு சிரியாவில் ஈராக் எல்லையில் அமைந்துள்ள அபு கமல் என்ற நகரம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது. கடந்த 9-ம் தேதி சிரிய ராணுவத்தினர் இந்த பகுதியில் நடத்திய அதிரடி தாக்குதலையடுத்து 40 சதவிகித இடங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதையடுத்து சிரிய ராணுவத்தினர் தொடர் தாக்குதல் நடத்தி அந்த நகரை நேற்று மீண்டும் முழுமையாக கைப்பற்றினர்.
இந்நிலையில், அந்நகரை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்ய ராணுவத்தினர் அப்பகுதியில் வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்கள் மக்கள் முகாம்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 9 குழந்தைகள் உட்பட 26 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என பிரட்டனை சேர்ந்த கண்காணிப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சிரியாவில் நடந்துவரும் போரினால் இதுவரை சுமார் 3 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல லட்சம் மக்கள் உயிருக்கு பயந்து நாட்டைவிட்டு தப்பியோடி உள்ளனர்.
சிரியா: ரஷ்யா ராணுவ தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 26 பேர் பலி....
Reviewed by Author
on
November 12, 2017
Rating:
Reviewed by Author
on
November 12, 2017
Rating:


No comments:
Post a Comment