மானுஷ் தீவு முகாமில் இருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமாக வெளியேற்றம் -
அவுஸ்திரேலியாவினால் பப்புவா நியூகினியாவின் மானுஷ் தீவில் நடத்தி வரப்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகளின் முகாமில் இருந்து புகலிட கோரிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மானுஷ் தீவில் இயங்கும் முகாம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏதுவானதாக இல்லை என பப்புவா நியூகினியா உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.
முகாமில் தங்கியிருந்த 300க்கும் மேற்பட்ட புகலிட கோரிக்கையாளர் முகாமில் இருந்து வெளியேற மறுத்து அங்கேயே தங்கியிருந்தனர்.
முகாமுக்கு வழங்கப்பட்ட மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் என்பன துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் புகலிட கோரிக்கையாளர்கள் அங்கு தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் 300க்கும் மேற்பட்ட புகலிட கோரிக்கையாளர்களை அங்கிருந்து இன்று அப்புறப்படுத்த முடிந்ததாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
பப்புவா நியூகினியா, கம்போடியா அல்லது நாவுரு தீவு ஆகிய மாற்று இடங்களில் குடியேற்ற முன்வைக்கப்பட்டிருந்த யோசனையை புகலிட கோரிக்கையாளர்கள் நிராகரித்திருந்தனர்.
இந்த புகலிட கோரிக்கையாளர்களில் சிலரை ஏற்றுக்கொள்ள அமெரிக்கா இணக்கம் தெரிவித்திருந்தது.
இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த புகலிட கோரிக்கையாளர்கள் மானுஷ் தீவில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மானுஷ் தீவு முகாமில் இருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமாக வெளியேற்றம் -
Reviewed by Author
on
November 24, 2017
Rating:
Reviewed by Author
on
November 24, 2017
Rating:


No comments:
Post a Comment