இலங்கைத்தமிழர் இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ளார்......
திரு.ஹேமலதாஸ் முத்துலிங்கம் என்னும் இலங்கைத்தமிழர் இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ளார் இவர் இலங்கை அரசின் இராணுவத்தினரால் சித்திரவதைக்குள்ளாகி இங்கிலாந்தில் தனது உயிரை பாதுகாப்பாற்றக்கோரி தஞ்ச விண்ணப்பம் கோரி இருந்தார் இவரது அகதி அந்தஸ்து உள்நாட்டுத்திணைக்களத்தால் நிராகரிக்கப்பட்டதையடுத்து இவர் 08- 11- 2017 அன்று கையொப்பம் இட சென்றபோது உள்நாட்டுத்திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்புவதற்காக தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
இந்த நபர் தமிழ்மக்களின் உரிமைக்காக இலங்கையிலும் பின்பு இங்கிலாந்திலும் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளார் இங்கிலாந்தில் நாடுகடந்த தமிழக அரசாங்கத்தின் செயற்பாடுகளில் மிகவும் ஆர்வத்துடன் செயல்படும் இவர் திரும்பி இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டால் இலங்கை அரச அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவார் என அஞ்சப்படுகிறது தாயார் இவரது வருகை பற்றி மிகவும் அச்சமடைந்துள்ளார் அத்தோடு தனது மகனின் உயிர் குறித்து மிகவும் அச்சமும் வேதனையும் அடைவதாக கூறுகின்றார்.
இலங்கைத்தமிழர் இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ளார்......
Reviewed by Author
on
November 09, 2017
Rating:

No comments:
Post a Comment