அண்மைய செய்திகள்

recent
-

மக்களின் முறைப்பாடுகளை தொடர்ந்து மன்னார் பள்ளமடு பிரதேச வைத்தியசாலைக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் திடீர் விஜயம்.(படம்)


பள்ளமடு பிரதேச வைத்தியசாலைக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் இன்று வியாழக்கிழமை(9) மாலை திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

குறித்த வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக சென்ற மக்கள் வடமாகாண சுகாதார அமைச்சரிடம் பல்வேறு முறைப்பாடுகளை முன் வைத்தனர்.

இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை(9) மாலை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு பிரதேச வைத்திய சாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு சென்ற சுகாதார அமைச்சர் அங்குள்ள பிரச்சினைகளை நேரடியாக அவதானித்தார்.

குறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்லும் மக்களை நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதாகவும்,வைத்திய சாலையில் நோயாளர் விடுதியில் உள்ளவர்கள் குறித்த நேரத்திற்கு வைத்திய பரிசோதனைக்கு உற்படுத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகளை பாதீக்கப்பட்டவர்கள் வடக்கு சுகாதார அமைச்சரிடம் தெரிவித்திருந்திருந்த நிலையிலே நேரடியாக பிரச்சினைகளை ஆராய அமைச்சர் வைத்தியசாலைக்குச் சென்றிருந்தார்.

-இதன் போது மன்னார் பிரதி பிரந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் றோய் பிரீஸ் அங்கு சமூகமளித்திருந்தார்.
-பிரச்சினைகளை நேரடியாக ஆராய்ந்த அமைச்சர் வைத்தியசாலைக்கு வரும் மக்களை தாமதிக்காது மருத்துவ உதவிகளை வழங்கி அனுப்பி வைக்குமாறும், மக்களுடன் அன்பான முறையில் நடந்து கொள்ளுமாறு வைத்தியசாலை பணியாளர்களுக்கு தெரிவித்தார்.

கடமை நேரங்களில் வைத்தியசாலை பணியாளர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் உடனடியாக உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துமாறு வைத்தியசலை பணியாளர்களுக்கு தெரிவித்ததோடு, பள்ளமடு பிரதேச வைத்திய சாலை தொடர்பில் தொடர்ந்தும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைப்பதாகவும்,எதிர் வரும் காலங்களில் அவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாத வகையில் அனைவரும் செயற்பட வெண்டும்.என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.






மக்களின் முறைப்பாடுகளை தொடர்ந்து மன்னார் பள்ளமடு பிரதேச வைத்தியசாலைக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் திடீர் விஜயம்.(படம்) Reviewed by Author on November 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.