கனடாவில் கோர விபத்து - யாழ்ப்பாண பெண் பலி - மற்றொருவர் ஆபத்தான நிலையில்
கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் தமிழ் பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த லோகநாதன் கலைச்செல்வி என்பவரே விபத்தில் பலியாகியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை ரொரன்டோ பகுதியிலுள்ள யோர்க் பல்கலைக்கழகத்திற்கு அருகில் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Toronto பகுதியில் உள்ள Steeles அவன்யூ பக்கத்தில் இருக்கும் W and Keele தெருவில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் கலைச்செல்வி உயிரிழந்துள்ள நிலையில் காயமடைந்த மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவரின் கழுத்து மற்றும் பின் பகுதியில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கனடாவில் கோர விபத்து - யாழ்ப்பாண பெண் பலி - மற்றொருவர் ஆபத்தான நிலையில்
Reviewed by Author
on
November 04, 2017
Rating:

No comments:
Post a Comment