இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு! தமிழகத்தை வாட்டியெடுக்கும் கனமழை -
இலங்கைக்கு அருகே ஏற்பட்டுள்ள தாழ் வளிமண்டல குழப்பம் காரணமாக, தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கடலோர பகுதிகளில் சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையத் தகவல்களை மேற்கோள்காட்டி தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை உக்கிரத்தைக் காட்டி வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 30 செ.மீ. மழை கொட்டியிருக்கிறது. சென்னை புறநகர் பகுதிகள் வெள்ளக் காடாகி கிடக்கின்றன.
புறநகர்களில் வீடுகளை விட்டு மக்கள் அகதிகளாக வெளியேறும் நிலைமை உருவாகியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளில் சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது எனவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு! தமிழகத்தை வாட்டியெடுக்கும் கனமழை -
Reviewed by Author
on
November 04, 2017
Rating:

No comments:
Post a Comment