காதலுக்காக கண்களின் உள்ளே பச்சை குத்திய பெண்: நேர்ந்த விபரீதம் -
டொரண்டோவை சேர்ந்தவர் கேட் காலிங்கர். இவரின் காதலர் எரிக் பிரவுன் விருப்பத்தின் பேரில் தனது கண்களில் பச்சை குத்த முடிவு செய்தார்.
எரிக் தனது கண்ணில் பிங்க் நிற பச்சை குத்தியதால், தான் பர்பிள் நிறத்தில் பச்சை குத்திகொள்ள கேட் முடிவெடுத்தார்.
இதையடுத்து காதலனே அவருக்கு பச்சை குத்திவிட்டார்.
இந்நிலையில் பச்சை குத்திய பின் கேட்-டுக்கு கண்களில் சில நாளில் பிரச்சனை ஏற்பட்டது.
ஒரு கண் மட்டும் பர்பிள் நிறத்தில் வீக்கம் அடைந்ததோடு அதே நிறத்தில் கண்ணீர் வந்துள்ளது.
காதலன் பச்சை குத்தும் போது முக்கியமான பாதுகாப்பு திரவம் ஒன்றை கலக்க மறந்துவிட்டதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவர்கள் கேட்-டின் கண்களை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் மற்றொரு கண்ணும் இதன் காரணமாக பாதிப்படைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இந்த பிரச்சனை காரணமாக காதலர்கள் இருவரும் சண்டையிட்டு பிரிந்த நிலையில், எரிக் மீது வழக்கு தொடுக்க இருப்பதாக கேட் கூறியுள்ளார்.
காதலுக்காக கண்களின் உள்ளே பச்சை குத்திய பெண்: நேர்ந்த விபரீதம் -
Reviewed by Author
on
November 26, 2017
Rating:

No comments:
Post a Comment