வடமாகாண சுகாதார சாரதிகளுக்கும்,வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலனுக்கும் இடையில் விசேட சந்திப்பு-(படம்)
வடமாகாணத்தில் உள்ள சுகாதார சாரதிகள் சங்கத்தினருக்கும்,வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனுக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (25-11-2017) காலை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களையும் சேர்ந்த சுகாதார சாரதிகள் சங்க பிரதி நிதிகள் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.
-குறித்த கலந்துரையாடலின் போது தற்போது கடமையாற்றுகின்ற சுகாதார சாரதிகளை சுகாதார திணைக்களத்தினுள் நிறந்தரமாக உள்ளீர்ப்பது தொடர்பில் அமைச்சருடன் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
-குறிப்பாக கடந்த காலங்களில் யுத்த சூழ்நிலையின் போது கடமையாற்றிய குறித்த சாரதிகளை உள்ளீர்க்காது புதிதாக நியமனம் பெற்றவர்களை நிறந்தரமாக உள்ளீர்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீண்டகாலமாக கடமையாற்றி வந்த சுகாதார சாரதிகள் கவலை தெரிவித்திருந்தனர்.
மேலும் கடந்த காலங்களில் நாட்டில் இடம் பெற்ற யுத்த சூழ்நிலையின் போது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சேவையாற்றியுள்ள தம்மை, சுகாதார திணைக்களத்தினுள் நிறந்தரமாக உள்ளீர்க்க வேண்டும் எனவும் குறிப்பாக தமக்கு வழங்கப்பட்டுள்ள விசேட பயிற்சிகளின் அடிப்படையில் தம்மை குறித்த திணைக்களத்தினுள் நிறந்தரமாக உள்ளீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சரிடம் முன் வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இவ்விடையம் தொடர்பாக வடக்கு சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனிடம் வினவிய போது,,,,
வடமாகாணத்தில் சுகாதார திணைக்களத்தில் கடமையாற்றுகின்ற சாரதிகள் இன்று (25) காலை என்னை சந்தித்து தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
-அவர்களின் முக்கியமான வேண்டுகோள் தமது சேவையினை சுகாதார திணைக்களத்தினுள் நிறந்தரமாக மட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்திருந்தார்கள்.
ஏற்கனவே இந்த விடையம் மாகாண மட்டத்தில் முதலமைச்சர் மற்றும் பிரதம செயலாளர் மட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு தற்காலிகமாக சுகாதார திணைக்களத்தினுள் இருக்கின்ற சாரதிகள் ஏனைய திணைக்களங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது.
எனினும் அதனை நிறந்தரமாக செய்வதற்கான வழிவகைகள் என்ன,அதனை நிறைவேற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாட வேண்டியுள்ளது.
இவ்விடையம் தொடர்பில் முதலமைச்சருடனும் பேச வேண்டியுள்ளது.
அவருடன் பேசி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Reviewed by Author
on
November 26, 2017
Rating:

No comments:
Post a Comment