அண்மைய செய்திகள்

  
-

மன்னார்,சன்னார் காட்டுப் பகுதியில் குழியில் வீழ்ந்து மூன்று நாட்களாக உயிறுக்கு போராடிய யானை மீட்பு-(படம்)


மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சன்னார் கிராம பதியில் பாரிய குழி ஒன்றினுள் வீழ்ந்து மூன்று நாட்களாக உயிறுக்கு போராடிய யானை ஒன்றை நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை (25-11-2017)மாலை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சன்னார் கிராமத்தில் வயலுக்குச் செல்லும் வீதிக்கு அருகில் காணப்பட்ட குழி ஒன்றினுள் கடந்த புதன் கிழமை யானை ஒன்று விழுந்துள்ளது.

-எனினும் குறித்த யானை குழியில் இருந்து வெளியில் வர முடியாத நிலை காணப்பட்டது.இந்த நிலையில் குறித்த யானையை காப்பாற்றும் வகையில் பிரதேச மக்கள் மேற்கொண்ட முயற்சியும் பயணளிக்கவில்லை.

-இந்த நிலையில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில்,குறித்த திணைக்கள அதிகாரிகள் நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை(24) மாலை குறித்த பகுதிக்கு வந்து யானையை மீட்டு காட்டுப்பகுதிக்குள் அனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது-






மன்னார்,சன்னார் காட்டுப் பகுதியில் குழியில் வீழ்ந்து மூன்று நாட்களாக உயிறுக்கு போராடிய யானை மீட்பு-(படம்) Reviewed by Author on November 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.