கருத்துக்கணிப்பாக அமையப்போகும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்....
உள்ளூராட்சித் சபைத் தேர்தலுக்கு நீதிமன் றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. எனினும் இத்தடை இடைக்காலமேயன்றி நிரந்தரமானதல்ல.
ஆகையால் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக் கான ஆயத்தங்களில் இறங்கியுள்ள அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தொடர்ந் தும் தமது ஆயத்தப் பணிகளை முன்னெடுக் கும் என்பது உறுதி.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அறி விப்பு என்பதே காலதாமதத்துடன்தான் வெளி வந்தது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூ ராட்சி சபைகளின் ஆட்சிக்காலம் காலாவதியான கையோடு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
எனினும் தென்பகுதி அரசியலில் இருக்கக் கூடிய ஸ்திரத்தன்மையற்ற சூழ்நிலை உள்ளூ ராட்சி சபைத் தேர்தலை பின்தள்ளியது.
தேர்தலை பின்தள்ளுவதால் நல்லாட்சிக்கு சாதகம் கிடைக்கும் என்று கருதப்பட்டாலும் தேர் தல் திணைக்களமும் அரசியல் கட்சிகளும் அதற் குக் கால அவகாசம் கொடுக்கத் தயாராக இல்லை.
இந்நிலையில் தேர்தலை நடத்தியாக வேண் டும் என்ற கட்டாயத்துக்கு அரசு வருகிறது. எனி னும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை கொண்ட மனு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் உள்ளூ ராட்சி சபைத் தேர்தலுக்கு இடைக்காலத் தடையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்ப தால் ஆறுதலும் திருப்தியும் அடையக்கூடியவர் களாக ஆளும் தரப்பையே நாம் பார்க்க முடி யும். தேசிய அரசு என்ற பெயரோடு நல்லாட்சி நகர்ந்தாலும் அவற்றின் செயற்றிறன் போதாது என்பது பொதுமக்களின் கருத்து.
ஆக, நல்லாட்சி மீது தென்பகுதி மக்கள் கொள்ளும் அதிருப்தி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வுக்கே சாதகமாக அமையும் என்பதும் தெரிந்த உண்மை.
அதேவேளை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகக்கூறி அரசியலமைப்புச் சீர்திருத் தத்துக்கு முன்னேற்பாடாக முன்மொழியப்பட்ட இடைக்கால வரைபு வெளிவந்திருக்கக்கூடிய இந்நேரத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்து முடிந்தால் தேர்தல் முடிவுகள் பல விட யங்களுக்கு சார்பாகவும் எதிராகவும் அமை யும் என்பது திண்ணம்.
அந்த வகையில் உள்ளூராட்சி சபைத் தேர் தலில் தென்பகுதி, மகிந்த ராஜபக்வுக்கு வெற்றியாக அமைந்தால் அதன்முடிவு அரசிய லமைப்பு சீர்திருத்தத்துக்கு சிங்கள மக்கள் ஆதரவல்ல என்பதாக அந்த முடிவு பார்க்கப் படுவதுடன்,
ஜனாதிபதி மைத்திரி - பிரதமர் ரணில் ஆகி யோரின் நல்லாட்சி என்ற நாடகத்தை முடிவு றுத்த வேண்டும் என்று மக்கள் கூறுவதாகவும் கருதப்படும். இது தென்பகுதி நிலைமையாக இருக்க,
தமிழர் தாயகமாகிய வடக்குக் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெறுமாக இருந் தால் அது வேறொருவிதமாக அமையும். அதா வது நடைபெறப்போகும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் அது,
இடைக்கால வரைபை தமிழ் மக்கள் தங்கள் தீர்வாக ஏற்றுக் கொள்கின்றனர்.
சர்வதேச விசாரணை தேவை இல்லை என்பதை தமிழ் மக்கள் அங்கீகரித்துள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் இருப்பது தொடர்பில் தமிழ் மக்கள்
எந்தவித மனவருத்தமும் அடையவில்லை.
தமிழர் தாயகத்தில் இடம்பெறும் சட்ட விரோத சிங்கள குடியேற்றங்கள், பெளத்த
விகாரைகளின் நிர்மாணங்கள் என்பவற்றை தமிழ் மக்கள் எதிர்க்கவில்லை என்பதுடன்
பெளத்தத்துக்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ் மக்கள் ஆட்சேபனை
தெரிவிக்கவில்லை.
என்பதான பல்வேறு விடயங்களை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வதாகவும் நிலைமை அமையும்.
ஆக, உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடை பெற்று அதன் முடிவுகள் வெளிவரும்போது மேற்குறிப்பிட்ட விடயங்கள் பற்றியும் தமிழ் மக்கள் சிந்தித்தாக வேண்டும் என்பதே இங்கு ஈண்டு கவனிக்கத்தக்க விடயமாகும்.
நன்றி-வலம்புரி
கருத்துக்கணிப்பாக அமையப்போகும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்....
Reviewed by Author
on
November 25, 2017
Rating:

No comments:
Post a Comment