அண்மைய செய்திகள்

  
-

3000 ஆண்டு பழமை வாய்ந்த மரகதசிலை: ரகசியங்களும் மர்மங்களும் நிறைந்த ஆலயம் -


ராமநாதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள ஆன்மிக சுற்றுலாத்தளமாக விளங்கும் தலங்களில் ஒன்றுத்தான் உத்திரகோசமங்கை, இந்த கோயில் நடராஜர் ரத்தினசபை என்று அழைக்கப்படுகிறது.
உலகத்தின் மிகப்பழமையான 3000 வருடங்களுக்கு முந்தைய மரகதக் கல்லால் ஆன ஒரு சிலையுடன் கூடிய கோயில் இதுவே ஆகும்.
இத்திருத்தலத்தில் தான் மாணிக்கவாசகர் தங்கியிருந்து இப்பகுதியை உலகுக்கு உணர்த்தும் வகையில் 9 பாடல்கள் பாடியுள்ளார்.
இத்திருத்தலத்தின் சிறப்பு என்வொன்றால் இந்த திருத்தலத்தில் இறைவன் உமையவள் மட்டும் காணும்படி நடனமாடியிருக்கிறார்.
சிவபெருமான் எல்லா திருத்தலங்களிலும் நடனமாடிய நிலையில் இருக்கமாட்டார். இது உலகிலேயே சிறப்பான தலமாக பார்க்கப்படுவதற்கு ஒரு காரணமாகும் அமைந்துள்ளது.

இந்த சிலை எப்போதும் சிரித்தமுகத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது காரணம் யார் எந்த குறையுடன் கோயிலுக்கு வந்தாலும் சிரித்துக்கொண்டிருக்கும் இறைவனைக் கண்டு மனம் இறங்கி துன்பம் மறந்துவிடுவதாக கூறப்படுகிறது.
இந்த ஆலயத்திற்கு இராவணனது மனைவி மண்டோதரி இந்த கோயிலுக்கு அடிக்கடி வருவது சிவபூசை செய்வதுள்ளார் என்று புராணங்கள் கூறுகின்றன.
இத்தலத்தில் அமையப் பெற்ற இலந்தை மரம் பூமியின் மகாபொக்கிஷம் என்று போற்றப்படுகிறது.
இதன் அடியில் மணிவாசக வள்ளல் அமர்ந்திருப்பதாக நம்பிக்கை உள்ளது.

இந்த அதியுரந்த மரகதசிலை ஆங்கிலேயர் ஆட்சியின்போதும் முகலாயர்கள் படையெடுப்பின்போதும் இந்த கற்சிலை களவாடப்படவில்லை என்று சான்றுகளில் குறிப்பிடுகின்றன.
இதை தொடர்ந்து இஸ்லாமியர்களின் புனித தலமாக கருதப்படும் மெக்காவுக்கு இங்கிருந்து சுரங்கப்பாதை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
நடராஜர் சிதம்பரத்தில் ஆடுவதற்கு பல ஆண்டுகள் முன்பே இங்கு ஆடியதாகவும், அவரது ருத்ரதாண்டவத்தால் ராமேஸ்வரம் பலமுறை அழிந்து மீண்டதாகவும் கூறப்படுவதனால் இந்த ஆலயத்தை ஆதிசிதம்பரம் என்றழைக்கப்படுகின்றது.
இவ்வாலயத்தில் பலரகசியங்கள் புதைந்துள்ளது அந்த ரகசியங்களை அறியமுற்பட்ட போது தான் பாணசூரன் வழிபட்ட பாணலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது மங்களநாதர் கருவறையில் வடசுவற்றை ஒட்டி இந்த பாண லிங்கம் உள்ளது.
இந்த திருத்தலத்தின் சிவபெருமான் சிலைகளின் கழுத்தில் பாம்பும் தலையில் கங்கையுமில்லை என்பதால் இது ஆதி தமிழர்கள் வழிபட்ட சிவபெருமான் என்று பலரும் கூறுகின்றார்கள்.

3000 ஆண்டு பழமை வாய்ந்த மரகதசிலை: ரகசியங்களும் மர்மங்களும் நிறைந்த ஆலயம் - Reviewed by Author on November 25, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.