சர்வதேச ரீதியாக இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ள தமிழ் மாணவன் -
சர்வதேச கணித திறனாய்வுப் போட்டியில் பங்குபற்றிய தமிழ் மாணவன் துரைராசசிங்கம் இமயவன் வெண்கலப் பதக்கமும், சான்றிதழும் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தாய்லாந்தில் கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற எட்டாவது சர்வதேச கணித திறனாய்வுப் போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் தரம் 09 இல் கல்வி பயிலும் இமயவன் பங்குபற்றியிருந்தார். இந்த நிலையிலேயே அவர் குறித்த போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளார்.
இதேவேளை, இவர் கடந்த 2015ஆம் ஆண்டு தாய்லாந்தில் இடம்பெற்ற கணித ஒலிம்பியாட் போட்டியிலும் வெண்கலப் பதக்கம் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச ரீதியாக இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ள தமிழ் மாணவன் -
Reviewed by Author
on
November 15, 2017
Rating:

No comments:
Post a Comment