மன்னார் பிரதேச செயலகத்திற்கு முன்பாக வறட்சி நிவாரணம் வழங்குமாறு சாந்திபுரக்கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
பிரதேச செயலாளரிடம் வினவியபோது
மன்னார் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 3519 குடும்பங்களுக்கான வறட்சி நிவாரணம் 2ம் கட்டமாக வழங்கியிருந்த வேளை சாந்திபுரக்கிராம மக்களின் 60 குடும்பங்களில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது மீதிக்குடும்பங்களுக்கு3ம் கட்டமாக வழங்குவதற்கான அனுமதியும் நிவாரணப்பொருட்களும் வந்தவுடன் தெரிவுசெய்யப்பட்டு வழங்கவுள்ளோம் ஆர்ப்பாட்டக்குழுவில் இருந்து 05 பேரிடம் பிரதேச செயலாளர் இச்செய்தியை யும் வாக்குறுதியையும் வழங்கியதன் பொருட்டு ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மனக்குமுறலில் சிலர்- நாம் எல்லாவற்றிற்கும் போராடவேண்டியுள்ளது ஆர்ப்பாட்டம் செய்யப்படவேண்டியுள்ளது எமக்கு தேவையானதைக்கூட க்கேட்டுப்பெறவேண்டியுள்ளது . எமது கிராமம்
- சமுர்த்திக்கொடுப்பனவு
- நிவாரணக்கொடுப்பனவு
- வீட்டுத்திட்டம் வீதி அபிவிருத்தி இன்னும் போன்ற பலவிடையங்களில் கண்டுகொள்வதே இல்லை புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம். தீர்வு கிடைக்காவிடில்.......

மன்னார் பிரதேச செயலகத்திற்கு முன்பாக வறட்சி நிவாரணம் வழங்குமாறு சாந்திபுரக்கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
Reviewed by Author
on
November 15, 2017
Rating:

No comments:
Post a Comment