தேசிய கலந்துரையாடல் நிகழ்வுக்கு பாக்கிஸ்தான் சென்ற இலங்கை குழு நாடு திரும்பியது.அக்குழுவில் மன்னார் ஊடகவியலாளர் J- நயன்
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன ஒன்றினணந்து இளைஞர் கழகங்களில் தெரிவு செய்யப்பட்ட இளஞைர்களுக்கு சர்வதேச இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டங்களில் பங்கு கொள்வதற்கு வழியமைத்துக் கொடுக்கின்றன.
அந்த வகையில் 9 வது தேசிய கலந்துரையாடல் நிகழ்வு கடந்த 31 ஆம் திகதி தொடக்கம் கடந்த 8 ஆம் திகதி வரை பாக்கிஸ்தானில் இடம் பெற்றது.
இவ்வருடத்திற்கான இளைஞர் பரிமாற்ற வேவைத்திட்டத்திற்கு இலங்கையில் இருந்து சுமார் 13 இளைஞர்கள் கடந்த 31 ஆம் திகதி பாக்கிஸ்தான் நாட்டிற்கு பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.
-குறித்த பயணத்தில் மன்னார் மாவட்டத்தில் இருந்து செல்வன் ஜோசப் நயன்( ஊடகவியலாளர் IBC-TAMIL)தெரிவு செய்யப்பட்டு பாக்கிஸ்தானுக்கு பயணமாகி இருந்தார்.
31 -10-2017ஆம் திகதி தொடக்கம் கடந்த 8 -11-2017ஆம் திகதி வரை பாக்கிஸ்தானில் பல்வேறு நிகழ்வுகளில் குறித்த குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த இளைஞர் பரிமாற்ற நிகழ்வுகளில் ஐப்பான், நேபாளம், லண்டன் , தாய்லாந்து , மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதி நிதிகள் உட்பட பாக்கிஸ்தான் நாட்டின் முன்னணி பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் அதிபர்கள் கலந்து கொண்டனர்.குறித்த குழுவினர் இன்று வியாழக்கிழமை அதிகாலை நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
தற்போது எல்லா நிகழ்வுகளிலும் மன்னார் சார்பாக எமது இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு தமது திறமையை வெளிப்படுத்தி மன்னாருக்கு பெருமை சேர்க்கின்றனர் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.....

தேசிய கலந்துரையாடல் நிகழ்வுக்கு பாக்கிஸ்தான் சென்ற இலங்கை குழு நாடு திரும்பியது.அக்குழுவில் மன்னார் ஊடகவியலாளர் J- நயன்
Reviewed by Author
on
November 10, 2017
Rating:

No comments:
Post a Comment