புனித பாப்பரசரை சந்தித்த ஈழத் தமிழர்! -
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இத்தாலியில் வசிக்கும் ஈழத் தமிழரான சுப்பையா குருபரன்தாஸ், புனித பாப்பரசர் Francesco அவர்களை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு அண்மையில் இடம்பெற்றுள்ளது. மத ஒற்றுமையை வலியுறுத்தி வத்திக்கானில் புனித பாப்பரசர் Francesco தலைமையில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஈழத் தமிழரான சுப்பையா குருபரன்தாஸ், மதத் தலைவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
அத்துடன், மதத் தலைவர்கள் ஒற்றுமைப்பட்டால், சதாரண மக்களும் ஒற்றுமையாக வாழ்வார்கள் எனவும் அவர் கூறியிருந்தார்.இதேவேளை, இத்தாலி ஜெனோவா பகுதியில் இந்து ஆலயம் ஒன்றை நிறுவி தனி ஒரு நபராக குறித்த ஆலயத்தை சுப்பையா குருபரன்தாஸ் செயற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புனித பாப்பரசரை சந்தித்த ஈழத் தமிழர்! -
Reviewed by Author
on
November 10, 2017
Rating:

No comments:
Post a Comment