கூட்டமைப்பு எம்.பிக்கள் கொழும்பில் வாழ்ந்து கொண்டு வடக்கைப் பற்றி எப்படிப் பேச முடியும்? ....அருமையான கேள்வி
வடக்கு மக்களோ யாழ்ப்பாண மக்களோ அதனைக் கேட்கவில்லை. அவர்கள் தமது அன்றாடப் பிரச்சினையைத் தீர்க்கத்தான் கேட்கின்றார்கள்.
இவ்வாறு மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். அரசமைப்பு நிர்ணய சபையில் இடைக்கால அறிக்கை மீதான நேற்றைய விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாம் அதிகாரத்தைப் பகிர்வது பற்றிப் பேசுகின்றோம். எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் கஷ்டப்படுகின்றனர். பெற்றோலைப் பகிர்ந்தளிக்க முடியாத அரசால் அதிகாரத்தை எப்படிச் சரியாகப் பகிர்ந்தளிக்க முடியும்.
கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட அரசமைப்பு மக்களுக்கு முன்னுரிமை வழங்கியது. அதிகாரத்தை பகிரும் அளவுக்கு நாட்டில் பிரச்சினை கள் இல்லை. யாழ்ப்பாண மக்களுக்கு அனைத்து வசதிகளையும் வழங்கவேண்டும்.
வடக்கு மக்கள் அதிகாரத்தைப் பகிரக் கோரவில்லை. அவர்கள் தங்கள் அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்கவே கேட்கின்றனர்.அரசியல் கட்சிகள்தான் அதிகாரத்தைப் பகிர்வது பற்றிப் பேசுகின்றன. புதிய அரசமைப்பு உருவாக்கம் அமெரிக்காவுக்கே தேவையாக இருக்கின்றது.
உள்ளூராட்சி மன்றங்கள், மாகாணசபைகள் இருக்கின்றன. ஏன் அதிகாரங்களைப் பகிரவேண்டும். பிரபாகரனுடன் பேச்சு நடத்த வாய்ப்பு இருந்தது. அவர் அந்தச் சந்தர்பத்தை வீணடித்தார். அவருக்குத் தேவையாக இருந்ததும் அதிகாரம்தான். யாழ்ப்பாண மக்கள் துன்பப்படும்போது அவர் சொகுசாக வாழ்ந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திர னுக்கு தெற்கில் வாழ்வதற்கு என்ன பிரச்சினை இருக்கின்றது ? வடக்கில்தான் பிரச்சினை உள்ளது. தெற்கிலிருந்து சென்று வடக்கில் வாழ முடியாது. ஆனால் தெற்கில் எல்லோரும் ஒன்றாக வாழமுடியும்.
யாழ்ப்பாண மக்கள் மீது நாம் அதீத அன்பு வைத்திருக்கின்றோம். சிறிமாவோ வடக்கு விவசாயிகளை நன்கு கவனித்தார். அந்த மக்கள் அவருக்குப் பெரும் ஆதரவு வழங்கினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் இருந்து கொண்டு வடக்குப் பிரச்சினை பற்றி எப்படிப் பேசமுடியும். அதிகாரப் பகிர்வு தேவையில்லை.
அதற்குப் பதிலாக இராணுவத்துக்குத் தேவையான காணிகளை எடுத்துக் கொண்டு ஏனைய காணிகளை மக்களிடம் ஒப்படைக்கவேண்டும். அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். அதற்கு மாறாக அதிகாரத்தைப் பகிர்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அரச தலைவர் முறைமையை ஒழிக்கவேண்டும். இந்தியா போன்று அரச தலைவர் முறைமை இருக்கவேண்டும்.
கூட்டமைப்பு எம்.பிக்கள் கொழும்பில் வாழ்ந்து கொண்டு வடக்கைப் பற்றி எப்படிப் பேச முடியும்? ....அருமையான கேள்வி
Reviewed by Author
on
November 09, 2017
Rating:

No comments:
Post a Comment