மன்னார் மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களில் ஒழுக்கத்தை கடைபிடியுங்கள்- மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு-படம்
மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என மன்னார் மாவட்ட மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் வி.எஸ்.சிவகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக இன்று 26-11-2017 விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
மன்னார் மாவட்டத்தின் பெரிய பண்டிவிரிச்சான் மற்றும் ஆட்காட்டிவெளி ஆகிய இரண்டு மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நாள் நினைவெழுச்சி நிகழ்வுகளுக்குரிய ஏற்பாடுகள் யாவும் நிறைவடைந்துள்ளன.
-குறித்த நினைவேந்தல் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.
அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளலாம். முக்கியத்துவம் வழங்கப்பட மாட்டாது. பிரதான பொதுச்சுடர் இரண்டு துயிலுமில்லங்களிலும் மாவீரர்களின் பெற்றோர்களே ஏற்றுவார்கள். ஏனையவர்களுக்கும் தீபம் ஏற்றுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆண்கள், பெண்கள் தமிழ் கலாசார உடை அணிந்து வருவது ஏற்புடையதாகும்.செல்பி எடுப்பதை தவிர்த்துக் கொள்ளவும்.ஒழுக்கத்தை கடைப்பிடிக்கவும்.தமிழீழ விடுதலைக்காக எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி இன்னுயிரை தியாகம் செய்த வீர மறவர்களின் தியாக இருப்பிடம் என்பதை மனதில் நிலை நிறுத்தவும்.
மாவீரர்களின் பெற்றோர்களை, உறவினர்களை, மனரீதியாக சங்கடப்படுத்துகின்ற செயற்பாட்டில் எவரும் ஈடுபடவேண்டாம்.என்பதனை தயவுடன் வேண்டுகின்றோம்.
வருகையாளர்கள் அனைவரும் ஏற்பாட்டாளர்களின் ஒழுங்கை பின் பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
போக்கு வரத்திற்குரிய பேருந்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆகவே அனைவரையும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களில் ஒழுக்கத்தை கடைபிடியுங்கள்- மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு-படம்
Reviewed by Author
on
November 26, 2017
Rating:

No comments:
Post a Comment